Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

23 மார்ச் 2009

ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த சச்சின் எதிர்ப்பு!

Sachin Tendulkar
மும்பை: ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவிலேயே இப்போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற வீரர்களின் கருத்து. அதுவே ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையானது, என்றும் சச்சின் கூறியுள்ளார். இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறுவதாலும், தீவிரவாத அச்சுறுத்தல் தலைதூக்கி இருப்பதாலும், கிரிக்கெட் போட்டிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போட்டிகளை சில காலம் தள்ளி வைக்குமாறு மத்திய அரசே கிரிக்கெட் வாரியத்தைக் கேட்டுக் கொண்டது. ஆனால் குறித்த நேரத்தில் போட்டிகளை நடத்தியே தீருவோம் என தீவிரமாக இருந்தது ஐபிஎல். இதனால், ஐபிஎல் போட்டிகளுக்கு முடிந்த வரை பாதுகாப்புத் தர முயற்சிப்போம் என்றும், ஆனால் முழுமையான பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாத நிலை உள்ளதால் போட்டிகளை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தார். இடையில் தனது போட்டி அட்டவணையை மாற்றியும் அறிவித்தது ஐபிஎல். ஆனால் ஐபிஎல் எதிர்பார்த்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர எந்த மாநில அரசும் முன்வரவில்லை. இதனால் போட்டிகளை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதாக ஐபிஎல் நேற்று அறிவித்தது. இது இந்தியர்கள் அனைவருக்கும் பெருத்த அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் மாறியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இந்த முடிவில் உடன்பாடில்லை என்றே தெரிகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவரும், முதல்நிலை வீரருமான சச்சின் டெண்டுல்கர், 'ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த முடிவெடுத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. இந்தப் போட்டிகளை இந்தியாவில்தான் நடத்த வேண்டும். அதுவே நியாயமானதும்கூட. ஒவ்வொரு இந்தியருக்கும் அதுவே பெருமையளிக்கும். என்னைப் போன்ற வீரர்களின் கருத்தும் இதுவே,' என்று கூறியுள்ளார். இதேபோல முன்னாள் கேப்டன் கபில்தேவும் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவை விட்டு வெளியில் கொண்டு செல்வதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com