13 ஜனவரி 2009
மத்யூ ஹெய்டன் ஓய்வை அறிவித்தார்...!
ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேலாக உலகின் ஏனைய அனைத்து அணிகளின் பந்துவீச்சாளர்களையும் அச்சுறுத்தி வந்த வீரர் மத்யூ ஹைடன் தனது ஓய்வை அறிவித்துள்ளது.ஹெய்டனுக்கும் இப்போது வயது 37.
அண்மைக்காலமாகவே தனது துடுப்பாட்டத்தில் குறைந்த ஓட்டங்களுக்கு அடிக்கடி ஆட்டமிழந்து வந்திருந்தார்.இவருடைய டெஸ்ட் ஓட்டங்கள் 8625. (சராசரி-50.73)ஆனால் கடந்த வருடம் முதல் இந்தியா, நியூ சீலாந்து,தென் ஆபிரிக்கா அணிகளுக்கு எதிராகவும் ஏழு டெஸ்ட் போட்டிகளில் பெற்றது வெறும் 149 ஓட்டங்கள் மாத்திரமே.
டெஸ்ட் போட்டிகள் போலவே ஒரு நாள் போட்டிகளிலும் ஹெய்டன் பிரகாசித்துள்ளார்..6133ஓட்டங்கள்,10சதங்கள், மற்றும் இரண்டு தடவை உலகக் கிண்ணம் வென்ற அணியில் இடம் பிடித்தவர்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக