சூப்பர் ஸ்டாரின் படங்களில் வரும் வில்லன் பாத்திரத்துக்கு எப்போதுமே மிகுந்த முக்கியத்தவம் அளிக்கப்படுவது வழக்கம். என்னதான் படம் தனக்காக ஒடினாலும், படத்தில் ஒரு பலமான வில்லன் இருப்பது கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் என நம்புபவர் சூப்பர்ஸ்டார்.
இதற்காகவே, பல படங்களில் வில்லனுக்கு தன்னைவிட கூடுதல் முக்கியத்துவம் தரச் சொல்லியிருப்பார்.முரட்டுக் காளையில் ஜெய்சங்கரை வில்லனாக சிபாரிசு செய்தவர் ரஜினிதான்.மிஸ்டர் பாரத்தில் சத்யராஜ்தான் அந்த வேடத்தைச் செய்ய வேண்டும் என முடிவு செய்தவரும் ரஜினிதான்.
லேட்டஸ்ட் பிளாக் பஸ்டர் சிவாஜியில், சுமனை வில்லனாக நடிக்க வைத்தது வரை, தனது வில்லனாக யார் வரவேண்டும் என்பதை ரஜினியே தீர்மானிக்கிறார்.
இப்போது எந்திரன் படத்திலும் பாலிவுட்டில் புகழ் பெற்ற ஒரு வில்லனை அறிமுகப்படுத்துகிறார்கள்.
டேனி டெங்ஸோங்பா…
குர்பானி, குதா கவா, அஜ்நபி போன்ற படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர் மூலம் மிகப் பிரபலமான நடிகர் இவர்.அமிதாப் போன்ற ஜாம்பவான்களுக்கு நிகராக பேசப்பட்டவர். இவர்தான் இப்போது எந்திரன் பட வில்லன்.
இவருக்குமுன் தெலுங்கு நடிகர் ஜே.டி. சக்கரவர்த்தி நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது அவர் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.டேனியின் சேர்க்கை படத்துக்கு நிச்சயம் பலம்தான். காரணம் இந்திப் படவுலகில் டேனியின் நடிப்புக்கென்று தனி ரசிகர் வட்டமுண்டு.
2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் பெற்ற டேனி, ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். செவன் இயர்ஸ் இன் திபெத் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுடன் நடித்துள்ளார்.(வலையில் ரசித்தவை )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக