அறிவியல் விஷயங்களை தெரிந்து கொள்வது அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகும்.அறிவியலில் எந்த வகை பிரிவாக இருந்தாலும் அதனை நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதும் இயற்கையே.ஆனால் இந்த தகவல்கள் வெறும் வரிகளாக,விரிவுரைகளாக இருந்தால் நமக்கெல்லாம் சற்று சலிப்பாக இருக்கும்.இதனை நீக்கி பல வகைகளில் அறிவியலின் அனைத்து பிரிவுகள் குறித்தும் கூறும் இணையத்தளம் ஒன்று http://sciencehack.com என்ற முகவரியில் உள்ளது.இதன் சிறப்பம்சம் என்னவெனில், அனைத்து விஷயங்களும் வீடியோக்காட்சிகளாக விளக்கப்படுவது தான்.இதன் பிரிவுகளை பட்டியலிட்டால் உங்களுக்கு நிச்சயம் ஆர்வம் ஏற்படும். அண்மைக்காலத்திய வீடியோக்கள் இயற்பியல், இரசாயனம், மனோதத்துவவியல், உயிரியல், றோபோட்டிக்ஸ், கணிதம், கணணிஅறிவியல், இயற்கையின் சக்தி போன்றவை இதில் அடங்கும்.உங்களுக்குப் பிடித்த அல்லது நீங்கள் தேடும் பிரிவைத் தேர்ந்த்தெடுத்து வீடியோக்களை ரசிக்கலாம்.நீங்கள் தேடும் விஷயம் எந்த பிரிவில் இருக்கிறது? என்று தெரியவில்லையெனில் கவலைப்படவேண்டாம்.உதாரணமாக மேகம் குறித்து அறிய விரும்புகிறீர்களா?அதற்கு வாய்ப்பு உள்ளது.இதில் சர்ச் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் Cloud என டைப் செய்து எண்டேர் தட்டினால்,உடனே அது எந்த பிரிவில் எங்கு இருக்கிறது என்று காட்டப்படும். இதில் காணப்படும் வீடியோக்கள் சாதாரணமாக தயாரிப்பட்டவை அல்ல.ஒவ்வொன்றும் ஒரு விஞ்ஞானியால் சரி பார்க்கப்பட்டு தகவல் துல்லியமாக இருக்கின்றனவா? எனச் சோதனை செய்யப்பட்டு தரப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக