Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

19 ஜனவரி 2009

சாஃப்ட்வேர் துறையும்...வீட்டுக் கடன்களும்..

ரியல் எஸ்டேட் ஏற்றத்திற்கு சாஃப்ட்வேர் துறைதான் காரணம் என குற்றம் சாட்டப்படுவதுண்டு. லட்சக்கணக்கில் சம்பளம்..மாதத்தவணைப் பற்றி..கவலையில்லை என்பதால்..வங்கிகளும் கடனை வாரி வழங்கின.700 சதுர அடி வீடுகள் கட்டிய வீடுகட்டும் நிறுவனங்கள் மத்தியதரத்தினரை மறந்து..1000 சதுர அடிகளுக்கு மேல் ..கார் நிறுத்தும் வசதியுடன் அடுக்ககங்கள் கட்டின.ஒரு சதுர அடி 7000,8000 என விலை நிர்ணயித்தன.சாமான்யனுக்கு சொந்த வீடு என்பது கனவாய் போயிற்று. சரி..வாடகைக்கு வீடு..என்றாலும்..அவர்கள் எவ்வளவு வாடகை கொடுக்கவும் தயாராய் இருந்தனர்.சாதாரணமாக 3000 வாடகை இருந்த அதே இடம்..6000/7000 என வாடகைக் கேட்கப்பட்டது. ஆனால் இன்று...செய்துக்கொண்டிருக்கும் வேலை நம்பிக்கையானதாக இல்லை.பொருளாதார நெருக்கடி... பாதுகாப்பு இல்லை.,இன்று சம்பாதிக்கிறோம்..நாளை நிலை என்ன..என உறுதியாக கூறமுடியவில்லை. அமெரிக்காவில் வீட்டுக்கடன் வாங்கி..திருப்பச் செலுத்த முடியாதவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்...ரியல் எஸ்டேட் துறை..அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. நம் நாட்டில் என்ன நடக்கும் எனத் தெரியாது.ஆகவே நண்பர்களே...இன்று உங்களுக்கு சம்பளம் வருகிறது...அமைதியாக உட்கார்ந்து யோசியுங்கள். நாளை வேலை போனாலும்..இன்றியமையா தேவைகளான உணவுக்கு..சேமியுங்கள்..உடைக்கு சேமியுங்கள்.உறையுள் வேண்டாமா எனக் கேட்காதீர்கள்.அதுவும் அவசியம்..அதற்கு கணிசமாக..திட்டம் போட்டு சேமியுங்கள். வீட்டுக் கடன் வாங்காதீர்கள் இப்போது.நிலமை மாறும்..அப்போது அதில் நுழையலாம்.மீனுக்காக காத்திருக்கும் கொக்காய் இருங்கள்..சமயம் வரும்போது..மீனை கொத்தலாம். ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை..போகாறு அகலாக் கடை..என்ற வள்ளுவன் வாக்கின் படி நடங்கள்.நாளை நமதே..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com