Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

24 ஜனவரி 2009

ஆஸ்கர்... உச்சபட்ச அங்கீகாரம் இல்லை : அமிதாப்

ஆஸ்கர் விருதுதான் சினிமா கலைஞர்களுக்கான உச்சபட்ச விருது இல்லை என்று இந்திய மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் கூறினார். ஜெய்ப்பூரில் 'பச்சனாலியா' புத்தக வெளியிட்டு விழாவில்
கலந்துகொண்ட அவர், பார்வையாளர்களின் சில கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது, ஆஸ்கர் விருது பற்றி அவர் கூறியது: நம்மைப் பொறுத்தவரை ஆஸ்கார் தான் உச்சபட்ச அங்கீகாரம் என்று ஒருபோதும் கருதக் கூடாது. அங்கே அவர்கள் ஜாம்பவான்கள்... இங்கே நாம் ஜாம்பவான்கள்.
தங்களது வட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைப்பை உருவாக்கிய வழங்கி வருவதே ஆஸ்கர் விருதுகள். அதில் ஒரு விருதை நமக்குக் கொடுத்தால், அதை உதாசீனப்படுத்தக் கூடாது. இந்திய சினிமா தான் எப்போதும் முன்னிலை வகிக்கிறது; சிறப்பிடம் பெறுகிறது.
ரஹ்மான், குல்ஸார் ஆகியோர் ஒருபுறமிருக்க, கேமராவுக்கு பின்னால் உழைக்கும் சவுண்ட் இயக்குனர் ரெசுல் பூக்குட்டிக்கும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. ஆஸ்கருக்கு ரெசுல் பரிந்துரைக்கப்பட்டது, தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியாவுக்கு பெருமைகள் பல சேர்த்துள்ள ரஹ்மான், கண்டிப்பாக இந்தியாவுக்காக ஆஸ்கர் பெற்று தருவார் என்று நம்புகிறேன், என்றார் அமிதாப் பச்சன்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com