விண்டோஸில் போல்டர் ஒன்றுக்கு பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும். பெயரை வழங்காது விடின் New Folder எனும் பெயரை விண்டோஸ் டிபோலடாக போட்டுக் கொள்ளும். பெயர் ஏதும் வ்ழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். அப்போது பெயரில்லாமல் போல்டரை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது. திரும்பத் திரும்ப ஸ்பேஸ் பாரையோ டெலீட் கீயையோ அழுத்தினாலும் நியூ போல்டர் எனனும் பெயரையே விண்டோஸ் எடுத்துக் கொள்ளும். அதற்க்கு ஒரு புதிய முறை ஒரு போல்டரை வழமையான முறையில் உருவாக்கிக் கொள்ளுங்கள் அதை Rename செய்து Alt + 255 டைப் செய்து அதன் பெயரை இல்லாமல் செய்யுங்கள். இலக்கத்தை டைப் செய்ய கீபோர்டில் நியூமரிக் கீபேடையே பயன் படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அடுத்து அந்த போல்டர் மேல் ரைட் க்ளிக் செய்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Customize டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Folder Icons பகுதியின் கீழ் Change Icon பட்டனில் க்ளிக் செய்ய போல்டருக்குரிய ஏராளமான ஐக்கன்களைக் அங்கே காணலாம்.
அந்த பெட்டியில் ஸ்க்ரோல் செய்யும் போது ஐக்கன்களுக்கு நடுவே ஓரிடத்தில் வெற்றிடம் இருப்பதை அவதானிக்கலாம்.அதிலுள்ள ஒரு வெற்றிடத்தில் க்ளிக் செய்ய அந்த இடம் தெரிவு செய்யப்படும். அந்த வெற்றிடமே நாங்கள் உருவாக்க இருக்கும் போல்டருக்குரிய ஐக்கன். இப்போது ஓகே செய்து விடுங்கள். அவ்வளவுதான் இப்போது நீங்கள் உருவாக்கிய அந்த போல்டர் மறைந்து விடுவதைக் காணலாம்.
இந்த போல்டரில் உங்கள் ரகசிய ஆவணங்கள் மற்றும் பைல்களை இட்டு பாதுகாக்கலாம்.
யாருமே இலகுவில் கண்டுபிடிக்க மாட்டார்கள். இது வழமையாக போல்டர்களை மறைத்து (Hidden Folders) வைக்கும் முறையை விடவும் பாதுகாப்பானதாகும்