24 ஜனவரி 2009
ஆஸ்கருக்கு செல்லும் மற்றொரு இந்திய படம்
ஸ்லம்டாக் மில்லியனர் மட்டுமல்ல. மற்றொரு இந்திய படமும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்த பிங்கி என்ற 8 வயது சிறுமி நடித்த ‘ஸ்மைல் பிங்கி’ என்ற ஆவணப் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பிங்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஸ்மைல் பிங்கி’ என்ற 39 நிமிட ஆவணப்படம் உதடு மற்றும் அண்ணப் பிளவு பாதிப்புடன் பிறந்த ஒரு குழந்தையை பற்றிய படமாகும்.
அசோசியேஷன் ஆப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் ஆர்ட் என்ற அமைப்பு கடந்த அக்டோபர் மாதம் இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தாம் பங்குபெற்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது குறித்து சிறுமி பிங்கி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சிறுமி பிங்கி ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள போதிலும் அமெரிக்கா சென்று பங்கேற்க குடும்பத்தின் நிதி நிலைமை அனுமதிக்காது என்பதால் அவர் அமெரிக்கா செல்வதில் சந்தேகம் எழுந்துள்ளது.
அவருக்கு உதவுவதற்கான முயற்சியில் இந்தப் படத்தில் முக்கிய பங்காற்றிய பிளாஸ்டிக் சர்ஜன் சுபோத் குமார் சிங் .ஈடுபட்டுள்ளார்