19 ஜனவரி 2009
2008 இன் சிறத்த மென்பொருட்கள்......
PC magazine னால் வருடம் தோறும் வெளியிடப்படும் வரிசைப்படுதலின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த மென்பொருட்களாக தெரிவு செய்யப்பட்ட மென்பொருட்களில் முதல் 10 இடங்களையும் பிடித்த மென்பொருட்களின் பட்டியலே இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
பிட்க்ட்பிக்
Adobe Reader
www.adobe.com
pdf ன் ஆக்கிரமிப்பு கணணி உலகில் பிரமிக்கத்தக்கது .Adobe reader தொடர்ந்து பலவருட்களாக முதல் 10 இடங்களுக்குள் தனது இருப்பிடத்தை தக்கவைதுள்ளது.2009 இலும் இதன் தானம் நிலைக்கும் என்பதில் ஜயம் இல்லை. google கூட pdf reader ஜ புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளது.
AIM
www.aim.COM
AIM messenger சட்டிங்கில் இந்த ஆண்டு பிரமிக்கத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது.google கூட தனது messenger ஊடாக AIM ல் login பண்ணக்கூடிய வசதியை செய்துகொடுத்துள்ளது.
Audacity
audacity.sourceforge.net
இது ஒரு open source software. இலவசமாக தரையிக்ககூடிய audio recording மற்றும் editing மென்பொருள்.இந்த மென்பொருளும் பல தரப்பட்ட பாவனையாளர்களால் அதிகம் தரையிறக்கப்பட்ட மென்பொருள்.
Firefox
www.mozilla.com
எல்லோராலும் அறியப்பட்ட browser.அறிமுகமான நாளில் இருந்ந்து முதல் 10 இடங்களை விட்டு நகருவதாக தெரியவில்லை.firefox download day ல் அதிகமாக தரையிறக்கம் செய்யப்பட்டு உலக சாதனை புரிந்த ஒரு மென்பொருள்.
GIMP
www.gimp.org
இது ஒரு image editing open source software.இது photoshop செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்வதாலும் இலவசமாக கிடைப்பதாலும் முதல் 10 இடங்களில் அரியாசன்ம் இட்டு அமர்ந்துள்ளது.
iTunes
www.apple.com/itunesஅப்பிளின் முன்னனி மென்பொருள். அப்பிள் iphone ஜ அறிமுகப்படுத்திய பின்பு இதன் மவுசு இன்னும் கூடிவிட்டது.
OpenOffice.or
gwww.openoffice.org
openoffice sum micro system த்தால் வெளியிடப்பட்ட ஒரு open source software. windows office இல் செய்யக்கூடிய அனைத்தையும் இதில் செய்யக்கூடியதாக உள்ளமையாலும் இலவசமாக கிடைப்பதாலும் தொடர்ந்து பல வருடங்களாக முதல் 10 இடங்களில் தனது இடதை தக்கவைத்துள்ளது.
Skype
www.skype.com
உலகில் அதிகமானவர்களால் பாவிக்கப்படும் ஒரு messenger மென்பொருள். PC to Phone என்னும் இந்த மென்பொருளின் தாரக மந்ந்திரம் பலரயும் கட்டிப்போட்டுள்ளது.
Thunderbird
www.mozilla.com/thunderbird
இது ஒரு movable email client software.mozilla வின் மற்றுமொரு வெளியீடு.தொடர்ந்து இந்தப்பட்டியலில் இருந்துவரும் மற்றுமொரு மென்பபொருள்
Ubuntu
www.ubuntu.com
Windows தனது பாவனையாளர் அனுமதியை கிடுக்கு பிடி பிடித்ததால் அடித்தது லாபம் Ubuntu க்கு. பல வருடங்களாக இந்தப்பட்டியலில் இருந்தாலும் தற்போது இதற்க்கு கிராக்கி கூடியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.முக்கியமாக windows vista மிரள வைக்கும் graphics.
WinAmp
www.winamp.com
சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக இப்பட்டியலில் தனது இருப்பிடதை தக்கவைத்துள்ள ஒரே ஒரு மென்பொருள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக