விண் கற்கள் பூமியின் மீது மோதக் கூடிய அபாயம் நிலவுவதாக விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.
ஒவ்வொரு ஆயிரம் வருடங்களுக்கு சில தடவைகள் பூமி மீது விண் கற்கள் மோதுவது வழமையானதொன்றன ஆய்வாளர்கள் சுட்க்காட்டுகின்றனர்.
பிரபஞ்சத்திலிருந்து பூமி மீது மோதவரும் விண் கற்கள் தொடர்பில் ஆய்வு நடாத்துவதற்கு வருடாந்தம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் பாரிய பொருட்கள் பூமி மீது மோதுண்டதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடும் எனவும் பேர்ன் வானசாஸ்திர நிபுணர் இன்கோ லியா தெரிவித்துள்ளார்.எமது வாழ் காலத்தில் இவ்வாறானதோர் அபாயம் ஏற்பட வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் சுவிட்சர்லாந்தில் சர்வதேச வானவியல் தினம் அனுஸ்டிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(நன்றி -swissinfo.ch)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக