இந்திப்படவுலகில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் அழகான நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் ஒன்றிரண்டு படங்கள் நடித்தும், பெரியளவில் சோபிக்க முடியாததால், அதன் பிறகு தமிழ் சினிமா வாய்ப்புகளை மறுத்து வந்தவர். இந்நிலையில், 'குசேலன்' படத்துக்குப் பிறகு பிரபல நடிகைகளின் லிஸ்டில் இடம்பிடித்துவிட்ட சோனா தொடங்கியிருக்கும் அழகு சாதனங்கள் விற்பனை செய்யும் கடையை திறந்துவைப்பதற்காக சென்னை வந்திருந்தார் ஷில்பா.அப்போது, தமிழ் சினிமாவில் நடிக்க ஆவலாக இருப்பதாகவும், தமிழில் ரஜினி, விக்ரம், விஜய் ஆகியோரை ரொம்ப பிடிக்கும் என்றும் சொல்லிவிட்டு பறந்தார். முன்பை விட, சர்ச்சைகளால் ஷில்பா ஷெட்டியின் புகழ் மேலும் கூடிவிட்ட நிலையில், அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வர, சிலர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக