Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

15 ஜனவரி 2009

எந்திரன் -த ரோபோ திரை விமர்சனம்...???

தலைவர் மீண்டும் ஜெயித்து விட்டார், சந்திரமுகி குதிரைன்னா, இயந்திரன் பறக்கும் குதிரை, குசேலனுக்காக ரஜினிக்கு எதிரா கொடி பிடிச்ச எல்லோரும், அதை கொடியிலே பணத்தை அள்ளுவாங்க. படி சூப்பர் ஸ்டார் ரஜினி அமெரிக்கா நாசாவிலே விண்வெளி ஆராட்சியாளர் பணியை செய்து கொண்டு வரும் அவர்,செவ்வாய் கிரகத்திற்கு சென்ற பீனிக்ஸ் விண்கலத்தை வடிவமைத்த குழுவில் பணி ஆற்றுகிறார் விண்கலம் மேலே செல்லும் பொது அதிலே தொழில் நுட்ப கோளாறு ஏற்படுகிறது, அதை சரி செய்யும் முயற்சியில் அவருக்கும் ரஷ்யா ஆரட்சியாளருக்கும் தீர்வு கொடுப்பதில் தகராறு, அவன் இந்தியாவையும்,இந்தியர்களையும் தரக்குறைவாக பேசி விட, அதற்க்கு தீர்வு கொடுத்து விட்டு வீட்டுக்கு செல்கிறார்.இந்தியாவை பற்றி பேசிய பேச்சிலே பாதித்த சூப்பர் ஸ்டார், விடுமுறை எடுத்து விட்டு சென்னைக்கு வருகிறார், வரும் பொது தன் சொந்த படைப்பான ரோபோவையும் எடுத்து கொண்டு வருகிறார்.வருகிற தலைவர் சென்னை திருவேல்லிகேணியிலே தங்குகிறார். ஆத்து மாமியின் மகளாக ஐஸ்வர்யாராய், அவளின் அக்காள் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் குடும்பமே தற்கொலை முடிவு எடுக்கிறார்கள், அவர்கள் உணவில் எடுத்து கலந்து இருப்பதை ரோபோவின் மூலம் அறிந்து அவர்களை காப்பாற்றுகிறார்.அவர்களின் பிரச்சனைகளை ரோபோவின் உதவியுடன் தீர்த்து வைக்கிறார். இப்படி எல்லாம் எந்த படத்திலும் வந்ததா ஞாபகம் இல்லைஐஸ்வர்யா ராயின் ஊனமுற்ற சகோதரனுக்காக பெட்ரோல் இல்லாத தானியங்கி வண்டி ஒன்றை தயாரித்து கொண்டுகிறார், அது மிகவும் பிரபலமடைய தலைவரிடம் நிறைய பேர் வருகிறார்கள்,அவர்களுக்கு இலவசமாக அந்த தொழில் நுட்பத்தை கொடுக்கிறார். தலைவரின் புகழ்அமெரிக்க அதிபரை விட வேகமாக வளர்கிறது.ஐஸ்வர்யாராய் தலைவர் மீது காதல் வயப்படுகிறாள்,அப்படி வரலைன்னா தமிழ் சினிமாவிற்கே களங்கம்.இந்த நிலையில் தலைவரின் வளர்ச்சி பிடிக்காத உள்ளூர் மோட்டார் வாகன தாயாரிப்பாளர்கள் அவரை தீர்த்து கட்ட ரவுடிகளை ஏற்பாடு செய்கிறார்கள்.வில்லன் இல்லன்னா படம் எப்படி நகர முடியும். தலைவர் படத்திலே சண்டை இல்லன்னா சக்கரை பொங்கலுக்கு உப்பு வச்சி சாப்பிடுற மாதிரி இருக்கும், ரவுடிகளுக்கு ஒரு காட்டு காட்டுகிறார் ரோபோவின் உதவியோடு, கொஞ்ச நாள்ல சண்டை காட்சி திருட்டு தனமா வெளியே வரும் அதனாலே அதை விளக்க வேண்டிய அவசியம் இல்லைஇதற்கிடையில் நாசாவின் அணு ரகசியங்கள் திருட்டு போகின்றது, அந்த பழி தலைவர் மேலே விழுகிறது,தலைவர் விடுமுறையில் சென்னையில் இருப்பதை அறிந்து கொண்டு அவரை கைது செய்ய அமெரிக்கா துப்பறியும் அதிகாரிகள் இந்தியா வருகிறார்கள். மத்திய அரசாங்கத்திலே வேலை பார்க்கும் அதிகாரி,உள்ளூர் வாகன தயாரிப்பாளரிடம் மத்திய அரசுக்கு வந்த ரகசிய உத்தரவை தெரிவிக்கிறார். சந்தப்பத்தை பயன் படுத்தி உள்ளூர் வில்லன், உள்ளூர் பத்திரிக்கைகள்,தொலை காட்சி நிறுவனங்கள் மூலமாக அந்த செய்தியை பிரபலப்படுத்துகிறார், செய்திகளில் அவர் சர்வதேச குற்றவாளியாக சித்தர்க்கப்படுகிறது.உண்மை என நம்பிய ஐஸ்வர்யாராய் வழக்கம் போல எல்லா கதாநாயகிகளும் செய்வது போலே அவரை விட்டு பிரிந்து விடுகிறார். மத்திய அரசாங்கம், சர்வதேச போலீஸ், அமெரிக்கா எப்.பி.ஐ தேடுவதோடு இடைவேளை. டீ,காபி குடிக்க போறவங்க போயிட்டு வாங்க.இரண்டாவது பாதியில் தனக்கு எதிரான சதியை முறி அடித்து, ஐஸ்வர்யாராயும் கை பிடிப்பதே( படத்துக்காக) மீதி கதை இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலே முதலில் ரஜினியை இழிவு படுத்திய தன் சக நண்பரிடன் இருந்து மின்-அஞ்சல் வருகிறது, அவன் விடுமுறைக்காக மேக்ஸ்சிகோ சொன்று இருப்பதாகவும், அவனை உடனடியாக வந்து பார்க்கும் படி மெக்சிகோ விலாசத்தை அனுப்புகிறார், அவனை தேடி மெக்சிகோ செல்கிறார் ரஜினி, ரோபோவின் உதவியுடன் சென்னை விமான நிலையத்தில் நுழைந்து மெக்சிகோ சொல்கிறார் அவரை தேடி அங்கு செல்லும் ரஜினி, அவரை யாரோ கொலை செய்து விடுகிறார்கள், அவர் இறக்கும் தரு வாயில் அவரிடம் இருந்து சில உண்மைகளை தெரிந்து கொள்கிறார், இந்த கொலை பழியும் தலைவர் மீது விழுகிறது. இது வரையில் வில்லன்களுக்கு ஓடி ஒழிந்த ரஜினி உண்மையை தெரிந்து கொண்டதால், அவனை தேடி செல்ல முடிவு எடுக்கிறார், முதலில் வில்லன் இருப்பிடம் தேடும் தலைவர் அவன் இந்தியாவிலே இருப்பது தெரிய வருகிறது, மீண்டும் ரோபோவின் உதவியால் சென்னைக்கு வருகிறார். சென்னையில் பழைய எதிரியும், புதிய எதிரியும் ஓன்று சேருகிறார்கள்(பழசு உள்ளுறு, புதுசு வெளியூரு).இருவரின் சதி திட்டங்களை முறியடித்து வெற்றி பெறுவதே இறுதி கட்டம்பாடல்கள் இன்னும் கொஞ்ச நாள்ல இணைய தளத்திலே வலம் வரும், அதனாலே அதை பத்தி பேச வேண்டிய அவசியம் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம் படத்திலே ரோபோ பேசுகிற எல்லாமே குத்து வசனம் தான், ஒன்னு இப்ப சொல்லுறேன், மீதி படம் பார்த்து தெரிந்து கொள்ளவும். தூங்கும் போது அடிச்சா கேடி, தூங்கிட்டே அடிச்சா கில்லாடி பிரமாண்டம், பிரமிப்பு, திகைப்பு, விறுவிறுப்பு, ரஜினி கலந்து தரப்பட்ட உலகத்தரம் வாய்ந்த தமிழ் படம் இயந்திரன். (படம் வெளியான பின்னர் தான் கதை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com