இன்று நமது உலகம் சந்தித்து கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியாக இருக்கட்டும் இல்லை சத்யம் நிறுவன மோசடியாக இருக்கட்டும் இவற்றிற்கு ஒரே காரணம் பேராசைகொண்ட பண முதலைகள் அதாவது முதலாளிகள். ஆயிரக்கணக்கான கோடியில் புரளும் பணத்தை இன்னும் பல மடங்காக பெருக்கும் ஆசையில் இவர்கள் செய்யும் வேலைகள் மிகவும் கீழ்த்தரமானவை.நாட்டின் பொருளாதாரத்தை ஏதோ இவர்கள் மட்டுமே தங்கள் தலையில் தாங்குவதாக நினைத்து பெருமிதம் கொள்ளும் இந்த மூடர்கள் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை. தவறு செய்வது இவர்கள் ஆனால் பாதிக்கப்படுவது சாமானிய மக்களே.அமெரிக்காவில் இதே போன்ற மோசடி என்ரான்(ENRON) கம்பெனியில் நடைபெற்ற பொழுது அதன் முதலாளிக்கு இருபத்தைந்து வருட சிறை தண்டனை கிடைத்தது.இதே போன்ற குற்றங்களுக்கு இந்தியாவில் அதிகபட்ச தண்டனை பத்து வருடம்.அது கூட ராமலிங்க ராஜுவுக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை.காரணம் இந்திய சட்டத்தில் உள்ள ஓட்டைகள்.வேறு சில சமூக பிரச்சனைகளை மீடியா கையில் எடுத்துக்கொண்டு போராடியதை போல் இதில் நடக்கும் என்று எண்ணாதீர்கள் காரணம் இத்தகைய மீடியா நிறுவனங்களை நடத்துவதே பண முதலைகள் தான். இன்று சத்யம் நாளை விப்ரோ என்றும் வதந்திகள் பரவ துவங்கி உள்ளன. இன்னும் எத்தனை கம்பெனிகளின் உண்மை முகம் வெளியில் வரும் என்று தெரியவில்லை.பொருளாதார நெருக்கடி இவர்களுக்கு இன்னும் நெருக்கடி கொடுக்கும் என்பதே உண்மை.நன்றி -(புது யுகம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக