25 மே 2009
கூகுளுக்கு ஒரு சவால்.... வந்திருச்சு வொல்ஃப்ரம் ஆல்பா!!
நமக்கு ஏதாவது ஒரு பொருளைப்பற்றியோ அல்லது துறையைப் பற்றியோ உடனடியாகத் தெரிந்து கொள்ள என்ன செய்கிறோம்?
விக்கிபீடியா, கூகுள் போன்ற வலைத்தளங்களில் தேடுகிறோம். கூகுள் என்றால் தேடிய விஷயம் சார்ந்த வலைத்தளத்தையும், விக்கிபீடியா என்றால் அந்த தளத்திலேயே நொடிப்பொழுதில் தேடித்தருகின்றன..
இவை இரண்டும் நமக்கு அருமையான சேவை தருகிறது என்பதில் வேறு கருத்தில்லை...
ஆனால், நமக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கணித்தும், சம்பந்தப்படுத்தியும் பார்க்க வேண்டுமென்றால் இந்த சேவைகளால் முடிகிறதா?
உதாரணத்திற்கு "இன்று காலை நான் உண்ட வாழைப்பழத்தில் எத்தனை காலோரி சக்தி உள்ளது, நமக்கு அது எந்த அளவிற்குப் போதுமானது" என்று பார்க்க, கூகுளில் தேடினால் வேறோரு தளத்தில் மீண்டும் தேட வேண்டும்.
இன்னொரு தேடல், "நம்ம ஊர் உடுமலைப்பேட்டையில் இருந்து நியூயார்க் எவ்வளவு தூரம்?" என்று தேடினால், பதில் கிடைக்க குறைந்தது 10 நிமிடம் ஆகும்..
இது போன்ற கேள்விகளுக்கு உடனடியாக பதில் வேண்டுமா? கவலை வேண்டாம்.. புதிதாக வந்திருக்கிறது "வொல்ஃப்ரம் ஆல்பா" ஓரிரு உதாரணங்களைப் பார்க்கலாமா?
முதலில் உடுமலைப்பேட்டை டு நியூயார்க் - உடுமலையில் இருந்து நியூயார்க் எவ்வளவு தூரம், இரண்டு ஊர்லயும் மக்கள் தொகை எவ்வளவு, இரண்டு ஊர்களைப் பற்றியும் மேலும் சில தகவல்கள் அங்கேயே!! http://www40.wolframalpha.com/input/?i=udumalpet+to+Newyork
இன்னொரு உதாரணம்.. ஆப்பிள் நிறுவனத்தையும், கூகுள் நிறுவனத்தையும் நொடியில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமா? இதோ... http://www40.wolframalpha.com/input/?i=Apple+Google
உங்கள் தங்கைக்கு அல்லது மகளுக்கு ஒரு புள்ளியியல் கணக்குப் போடனுமா? இதோ... http://www40.wolframalpha.com/input/?i=SD+of+55%2C35%2C78%2C50%2C68%2C70%2C48
நம்ம நாட்டோட தனி நபர் வருமானத்தை வேற ஏதாவது ஒரு நாட்டோட ஒப்பிடனுமா கவலை வேண்டாம் இதோ... http://www40.wolframalpha.com/input/?i=India+China+per+capita+income
இது மட்டும் இல்லை.. கணிதம், புள்ளியியல், புவியியல், சமூக பொருளாதார தகவல்கள், வானிலை, மொழிகள், வானிலை, பொருட்கள், பொருளாதாரம், புத்தகங்கள், மருத்துவத் தகவல்கள் என அனைத்து துறைகள் சார்ந்த ஒப்பீடுகளையும் கணிப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமா இதோ இருக்கிறதே வொல்ஃப்ரம் ஆல்பா..
http://www40.wolframalpha.com/examples/
வொல்ஃப்ரம் ஆல்பா.. - மே 18ம் தேதியன்று வெளியிடப்பட்ட ஒரு தேடல் சேவை நிறுவனம். எந்த வகையான கேள்வியையும், கணிப்புகளையும் தர "வொல்ஃப்ரம்" எனபவர் ஆரம்பித்த நிறுவனம் தான் வொல்ஃப்ரம் ஆல்பா. என்ன? இப்ப சொல்லுங்க வொல்ஃப்ரம் ஆல்பா.. கூகுளுக்கு சவால் தானே?
..