27 மே 2009
மலையாளத்தில் தமன்னா
தமன்னா முதல் முறையாக மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கு, அங்கிருந்து தமிழ் என மாறி வந்தவர் தமன்னா. தமிழுக்கு வந்த புதிதில் ராசியில்லாத நடிகையாக பார்க்கப்பட்டார். ஆனால் இப்போது தமன்னாவின் கால்ஷீட்டைப் பெறுவது குதிரைக் கொம்பாகியுள்ளது. அந்த அளவுக்கு பிசியாகி விட்டார் தமன்னா.
இந்தநிலையில் மலையாளப் பட இயக்குநர் லால், தமன்னாவை அணுகி ஒரு கதையைக் கூறி இதில் நீங்கள்தான் நடிக்க வேண்டும், வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.
கதையைக் கேட்டதுமே நடிக்க ஒப்புக் கொண்டு விட்டாராம் தமன்னா. அந்த அளவுக்கு கதை அவருக்குப் பிடித்துப் போய் விட்டதாம்.
லால், வழக்கமாக நடிகர், நடிகைகளுக்காக கதையை உருவாக்குபவர் இல்லை. கதையை உருவாக்கி விட்டு, அந்தக் கதைக்குப் பொருத்தமான கலைஞர்களைத் தேடுவதுதான் அவரது ஸ்டைல். ஆள் கிடைக்காவி்ட்டால் பொறுமையாக காத்திருந்து நடிக்க வைப்பார்.
அவரே தேடிப் போய் தமன்னாவை நாடியுள்ளதால், நிச்சயம் இது தனக்கான கதைதான் என்பதை உணர்ந்தே நடிக்க ஒப்புக் கொண்டாராம் தமன்னா.
இந்தப் படத்தின் மூலம் 3வது தென்னிந்திய மொழிப் படத்தில் அறிமுகமாகிறார் தமன்னா.