![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
21 செப்டம்பர் 2009
அசினுக்கு ஆபரேஷன்!
இருங்க... இருங்க... பதறாதீங்க. நடிகை
களுக்கு ஒண்ணுன்னா நம்ம மனசுதான் தாங்காதே... மேட்டர் அவ்வளவு சீரியஸில்லை... நடிகை அசினுக்கு சைனஸ் தொல்லை இருப்பதால் இன்று மும்பையில் அவருக்கு ஆபரேஷன் நடக்கிறது.
இந்த ஆபரேஷனில் அவரது மூக்குப் பகுதியில் உள்ள சதை சீரமைக்கப்பட உள்ளதாம்.
அசினுக்கு நீண்ட நாட்களாகவே சளித் தொல்லை இருந்து வருகிறதாம். இதைச் சரிசெய்ய எண்டோஸ்கோபிக் சைனஸ் சர்ஜரி செய்கிறார்களாம்.
மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் இன்று இந்த அறுவைச் சிகிச்சை நடக்கிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அசின், "இது சின்ன சர்ஜரிதான். இரண்டு மூன்று நாட்களில் குணமாகி வந்துவிடுவேன். இப்போதைக்கு கைவசமிருந்த விளம்பரப் படங்களையெல்லாம் முடித்துவிட்டேன். ஆபரேஷன் முடிந்து வந்ததும் பழையபடி லண்டன் ட்ரீம்ஸ் படத்துக்காக சல்மான் கானுடன் படம் தொடர்பான விளம்பர வேலைகளில் பிஸியாகி விடுவேன்," என்றார்.
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)