லினக்ஸ்க்கான கூகிள் குரோம் பதிப்பில் எந்த சொருகிகளும் செயற்படுவதில்லை. இன்னமும் உத்தியோக பூர்வ பதிப்பு வெளிவராத காரணத்தால் லினக்ஸ் ஊராக்கள் Flash செயலிகள், கோப்புகளை கூகிள் குரோமில் இயக்க முடிவதில்லை. ஆனாலும் ஒரு மாற்ற வழி மூலம் கூகிள் குரோமில் Flash ஐ நிறுவலாம்.
படத்தில் காட்டியவாறு Terminal ஐ திறக்கவும்.
பின்னர் பின்வரும் கொமாண்டை டர்மினலில் இயக்கவும். இதன் மூலம் Flash plugin ஐ நிறுவிக்கொள்ளுங்கள்
sudo aptitude install flashplugin-installer
பின்னவரும் கொமாண்டை நிறுவி Flash Plugin நிறுவப் பட்டுள்ள இடத்தை அறியவும்
sudo updatedb sudo locate libflashplayer.so
உங்களுக்கு பின்வருமாறு ஒரு விடைகிடைக்கும்
mayooresan@Struti:~$ sudo locate libflashplayer.so /usr/lib/flashplugin-installer/libflashplayer.so mayooresan@struthi:~$
இதன் அர்த்தம் /usr/lib/flashplugin-installer/ எனும் இடத்தில் பிளாஷ் பிளேயர் உள்ளது என்பதேயாகும்
இப்போது பின்வரும் கொமாண்டை இயக்கி கூகிள் குரோமிற்காக ஒரு டிரக்ட்ரியை உருவாக்கவும்
sudo mkdir /opt/google/chrome/plugins
பிளாஷ் கோப்பை இந்த Directory இனுள் பிரதி செய்யவும்
sudo cp /usr/lib/flashplugin-installer/libflashplayer.so /opt/google/chrome/plugins
அடுத்த தடவை கூகிள் குரோம் இயங்கும் போது, பிளாக்கின்களை சரிபார்க்குமாறு கூறவேண்டும் அதற்கு பின்வரும்மாறு Applications மேல் வலது சொடுக்கு ஒன்று போடுங்கள். அதிலே Edit Menu என்பதை படத்தில் காட்டியவாறு தெரிவு செய்யுங்கள்.
Menu Editor இல், to Internet > Google Chrome பின்பு Properties பொத்தானை அமுக்கவும்.
Launcher Properties windowஇல், Command field இல் உள்ளதை பின்வரும் உரையில் உள்ளவாறு மாற்றியமைக்கவும்….
/opt/google/chrome/google-chrome –enable-plugins %U
இப்ப Close பொத்தானை அம்முக்கி வெளியே வாருங்கள் ஒருதடவை Log off ஆகி Log on ஆகுங்கள். இப்போது Application -> Internet ->Google Chrome என்று கூகிள் குரோமை ஆரம்பியுங்கள். YouTube போன்ற ஒரு தளத்திற்கு சென்று வீடியோக்களை இயக்குங்கள்.
மேலே பாருங்கள், உன்னைப் போல் ஒருவன் ட்ரேயிலர் என்னமா ஓடுது என்று
Firefox, Opera போன்றவற்றில் சரியாக இயங்களாத Flash Contents இந்த முறைமூலம் Google Chrome இல் சரியாக இயங்குகின்றது. ஆனால் கூகிள் குரோம் தமிழ் எழுத்துக்களை சரியாக Render பண்ணுவதில்லை. தற்போதைக்கு Firefox உலாவி மட்டுமே அந்த வேலையைச் சரியாக செய்கின்றது. இந்த கூகிள் குரோம் புண்ணியத்தால் எனது விருப்பமான விளையாட்டுக்களான FarmVille, Barn Buddy என்பவற்றை தங்குதடையின்றி விளையாடுகின்றேன். யிப்பீஈஈஈஈஈ……….!