டெஸ்ட் கிரிக்கெட்டிலும், ஒரு நாள் போட்டியிலும் தனி முத்திரை பதித்தவர். குறுகிய காலமே இவரது கிரிக்கெட் வாழ்க்கை இருந்தபோதிலும் கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவர்.
தற்போது தனது 2வது இன்னிங்ஸை அரசியலில் தொடங்கியுள்ளார் காம்ப்ளி.
24 செப்டம்பர் 2009
மகா. சட்டசபை தேர்தல் - காம்ப்ளி வேட்பு மனு தாக்கல்
மும்பை: மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, விக்ரோலி தொகுதியில் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
லோக் பாரதி கட்சி என்ற கட்சியின் சார்பில் வினோத் காம்ப்ளி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். விக்ரோலி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
தனது வேட்பு மனு தாக்கலை இன்று காம்ப்ளி தாக்கல் செய்தார். இதற்காக சியோன் ரயில் நிலையம் வந்த அவர் அங்கிருந்து ரயிலில் ஏறி விக்ரோலி வந்து சேர்ந்தார். அவருடன் ஏராளமான ஆதரவாளர்களும் பயணம் செய்தனர்.
ரயில் பயணம் செய்தது குறித்து காம்ப்ளி கூறுகையில், 1985ம் ஆண்டு எனது வாழ்க்கைப் பயணம் ரயிலில்தான் தொடங்கியது. கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதற்காக ரயிலில் வருவது வழக்கம்.
எனவே எனது 2வது இன்னிங்ஸையும் ரயிலிலேயே தொடங்க தீர்மானித்தேன். கிட்டத்தட்ட 12 அல்லது 15 ஆண்டுகளுக்குப் பிறகு நான் ரயிலில் வருகிறேன்.
கல்வி, சுகாதாரம், விளையாட்டு ஆகியவற்றுக்கு நான் முக்கியத்துவம் தரப் போகிறேன். அதற்காக நான் பாடுபட்ப் போகிறேன் என்றார் காம்ப்ளி.
லோக் பாரதி கட்சி மூன்றாவது அணியில் இடம் பெற்றுள்ளது. இக்கூட்டணியில் இடதுசாரிகள், ஜனதாதளம், இந்திய குடியரசுக் கட்சி, சமாஜ்வாடிக் கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
மும்பையின் நெரிசல் மிகுந்த சால் எனப்படும் குடியிருப்பு ஒன்றில் பிறந்தவர் காம்ப்ளி. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். மும்பையிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்து ஆடிய முதல் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர்.