Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

19 மே 2009

"கடவுள் இருக்கின்றது"

எச்சரிக்கை : கொஞ்சம் நீளமான பதிவு. ரொம்ப இல்லாட்டாலும் கொஞ்சம் டெக்னிகலான விஷயங்கள் உண்டு. ஆற அமரப் படிங்க. தலைப்பே ஒருமாதிரியா இருக்கா? இருக்கட்டும்... இருக்கட்டும்... கடவுள்னு ஒருத்தர் இருக்காரா இல்லையா? கடவுள் அஃறிணையா உயர்திணையா? இல்லை உயர்ந்ததிணையா? ஆத்திகனோ நாத்திகனோ, கல்லுக்குள்ள தேரை மாதிரி மனசோட அடி ஆழத்துல இந்தக் கேள்வி நிச்சயம் இருக்கும். ஆன்மீக மார்க்கத்துல கடவுளை "விளக்க" அநேக வழிகள் இருக்கு. ஆனா பொதுவா எல்லா வழிகளுமே intangible or subtle or vague. Concrete-ஆ இதுதான் இதுன்னு எளிமையாச் சொல்ல முடியல - அல்லது சொல்வது convincing-ஆ இல்லை. ஆனா விஞ்ஞானத்துக்கு இந்த அசௌகரியமே கிடையாது. எதையாவது செஞ்சு நிரூபிக்க முடிஞ்சா சரி ; இல்லேன்னா ஒத்துக்கவே ஒத்துக்காது. பூமி தட்டையானது, பூமிதான் மத்தியில; மத்த கிரகங்கள் அதைச் சுத்தி வருதுங்கறதுல இருந்து பலப் பல மதம் சார்ந்த, கடவுள் சார்ந்த நம்பிக்கைகளை தகர்த்து 'இதுதான் உண்மை'ன்னு அறுதியிட்டுச் சொன்னது விஞ்ஞானம். ஆனா விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒண்ணுக்கொண்ணு எதிர்ப்பு மாதிரி தோணினாலும், உண்மைல ரெண்டுமே complimenting each other. இருக்கட்டுமே... எனக்கு என்ன ஆச்சு? எதுக்கு இந்த பீடிகை எல்லாம்? சொல்றேன். நேற்று முன் தினம் இன்னொரு ஓய்வுக்கான வாய்ப்பு கிடைச்சதுனால சட்டுனு "செர்ன்" போகணும்னு முடிவு பண்ணி கிளம்பிட்டேன். என்னோட ட்ரீம் லிஸ்ட்ல இருந்த இடம். CERN - European Centre for Nuclear Reasearch. இப்பதான் கொஞ்ச நாளா பார்வையாளர்களுக்கு திறந்துருக்காங்க. இது 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளோட நிதி உதவியோட ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். போன செப்டம்பர்ல பேப்பர்ல படிச்சுருக்கலாம்..."ஏதோ டெஸ்ட் பண்றாங்களாம்... கொஞ்சம் ஏமாந்தாலும் உலகமே அழிஞ்சுரும்னு சொல்றாங்கடா மாப்ள... அடுத்த மாசம் கல்யாணத்த வெச்சுக்கிட்டு இதெல்லாம் நமக்குத் தேவையா?"னு எங்கயாவது டயலாக் கேட்டிருக்கலாம்... அந்த முக்கியமான சோதனையை நடத்தியது CERN. இந்த பரிசோதனைக்காக 5 இடங்கள்ல சோதனைக்கூடங்கள் இருக்கு. அதுல நாலு ஃப்ரான்சுக்குள்ள. ஒண்ணு ஜெனீவாவுக்கு பக்கத்துல ஸ்விஸ்-ஃப்ரான்ஸ் பார்டர்ல இருக்கற "மெய்ரின்"ங்கற கிராமத்துல இருக்கு. அங்கதான் நான் போனேன். ஜெனீவால இருந்து டவுன் பஸ் போகுது. 25 நிமிஷத்துல போயிடலாம்.
அப்பிடி இங்க என்னதான் சோதனை பண்றாங்க? அதுக்கு முன்னால கொஞ்சம் சயன்ஸ் ரிவைஸ் பண்ண வேண்டியிருக்கும். எல்லாப் பொருட்களும் அணுக்களால் ஆனது, அணுவோட ந்யூக்ளியஸ்க்கு உள்ள புரோட்டான்ஸ் இருக்கு, எலக்ட்ரான்ஸ் அதை சுத்தி வருதுங்கறது தெரியும். அப்பறம் புரோட்டான்களுக்கு உள்ள க்வார்க், எலக்ட்ரானுக்குள்ள லெப்டான்.... இதெல்லாம் இருக்குங்கறதும் தெரியும். ஆனா அதுக்கும் நுணுக்கமா ஒரு துகள் இருக்கலாம்... அதுதான் GOD Particle னு Higgs சொல்ற வரைக்கும் தெரியாது. அவர் சொன்னதால அதுக்கு Higgs Boson னு ஒரு பேரும் உண்டு. அதைத் தேடித்தான் இங்க சோதனை. பிரபஞ்சம் தோன்றினபோது அது இருந்துருக்கணும். பிரபஞ்சம் தோன்றிய (Big Bang) 10^-43 செகண்ட்க்கு என்ன நடந்திருக்கலாமோ அதை மறுபடி நிகழ வைத்து அந்த பரம ரகசியத்தை தெரிஞ்சுக்க கடந்த 40 வருஷமா இந்த திட்டம் நடக்குது. அந்த ரகசியத்தைத் தெரிஞ்சுக்கற வரைக்கும் அறிவியலாளர்களுக்கு தூக்கமே வராது. சரி.... அதை எப்பிடித் தேடறது? அணுவே கண்ணுக்குத் தெரியாத ஒண்ணு. அதையும் விட நுணுக்கமான ஒண்ணை எப்பிடி...? அங்கதான் நம்ம ஐன்ஸ்டீன் சொன்னது உதவிக்கு வரும். E=mc2. ஆற்றல்ங்கறது எந்த நிலைலயும் இருக்கு. ஆற்றலோட condensed form நிறை (mass). நிலையா இருக்கும்போது ஈர்ப்பு விசையைப் பொறுத்து ஒரு நில ஆற்றலும் (potential) இயங்கும்போது இயக்க ஆற்றலும் (kinetic) வெளிப்படுது. அப்ப ஒளியோட வேகத்துல ஒரு துகளோட ஆற்றல் எவ்வளவு இருக்கும்? நம்மால நினைச்சே பாக்க முடியாது. அந்த மாதிரி ரெண்டு எனர்ஜியை மோத விட்டா...? அப்பிடி ஒரு மோதல்ல... ஒரு ஆற்றல் மிக்க மூலத்துல இருந்துதான் பிரபஞ்சம் உண்டாச்சுங்கற சித்தாந்தத்தின் அடிப்படைல இந்த சோதனை. அப்பிடி ஒரு மோதல் நிகழும்போது இந்த GOD Particle வெளிப்படலாம். எல்லாத்துக்கும்.. எல்ல்ல்ல்ல்லாத்துக்கும்... மூல சக்தியான அந்த சக்தி என்னதுன்னு ஒருவேளை விடை கிடைக்கலாம்ங்கற முயற்சிதான் இது. எப்பிடி இந்த மோதலை நிகழ்த்தறது? ரெண்டு புரோட்டன்களை ஒளியோட வேகத்துல ஒண்ணோட ஒண்ணு மோத வைக்கலாம். ஆனா ஒளி வேகத்துல புரோட்டான் துகளை முடுக்கணும்னா நேர்கோட்டுப் பாதைல முடியாது. அவ்வளவு தொலைவுக்கு பூமில சோதனைக்கூடம் வைக்க முடியாது. மாற்று என்னன்னா, அதை ஒரு வட்டப் பாதைல முடுக்கறது. இதுக்காக பூமிக்கு 100 மீட்டர் கீழ 27 கிமீ நீளத்துக்கு ஒரு வட்டப் பாதை அமைச்சுருக்காங்க. பேரு Large Hadron Collider (LHC). அந்தப் பாதைல 5 இடத்துல சோதனைக் கூடங்கள். ஒரு துகள் முடுக்கி(Particle Accelerator) மூலமா சில பில்லியன் புரொட்டன்களை எதிரெதிர் பாதைகள்ல கிட்டத்தட்ட ஒளி வேகத்துக்கு (99.99%) முடுக்கி இந்த 27 கிமீ பாதைல அங்கங்க அதுக மோதறதுக்கு வசதியா பாதைகளை குறுக்க ஓடவெச்சு..... எங்கயாவது மோதினா அந்த நிகழ்வுகளை துல்லியமா சேகரிச்சு அனுப்ப சூப்பர் கம்ப்யூட்டர்க... எல்லாமே அதிவேக கடத்திகள். Super conductors. ப்ரோட்டான்களை முடுக்கி அதுகளை deflect பண்ணி வட்டப் பாதைல ஓட வைக்க அதிவேகக்கடத்தி இருமுனை மின்காந்தங்கள் (super conducting dipole electromagnets), புரோட்டான்களை நெருக்கமா pack பண்ணி மோதலுக்கான சாத்தியங்களை அதிகரிக்கரதுக்கு நால்முனை மின்காந்தங்கள் (quadrupole). (இந்த Dipole / Quadrupole பத்தியே ஒரு நாள் முழுக்க பேசலாம்) இந்த மின்காந்தங்கள் எல்லாமே -271Cலதான் முழுத் திறன்ல வேலை செய்ய முடியும். எல்லாமே superconductingனால ஒரு தனி cooling system. திரவ நைட்ரஜன், திரவ ஹீலியம் - மில்லியன் லிட்டர்களுக்கு மேல - இதெல்லாம் பயன்படுத்தி குளிர்விக்கறாங்க. எல்லாமே extreme technologies. மோதும்போது சிதறல்ல வேறு சில துகள்களும் - GOD particle உள்பட - கிடைக்கலாம். அதைக் கண்டுபுடிச்சு சேகரிக்க Particle Detectors இருக்கு. மேலும் இந்த பரிசோதனையின்போது TB கணக்குல சேகரிக்கற டேடாவை அனுப்ப, சேகரிக்க, ஆய்வு பண்ணன்னு பல நூதனமான தொழில்நுட்பங்கள் (grid computing) கூட இந்த ஆராய்ச்சியோட பக்க விளவுகளாக உருவாகியிருக்கு. இன்னும் சில வருடங்கள்ல அதெல்லாம் day-to-day computing முறைல வந்துடலாம். இப்பவே இந்த தொழில் நுட்பங்களை மருத்துவத் துறைல பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. போன செப்டம்பர் மாசம் இதை டெஸ்ட் பண்ணும்போது எதிர்பாராத ஒரு சின்ன மின் கசிவுல திரவ ஹீலியம் சூடாகி வாயுவாகி, அழுத்தம் அதிகமாகி 50 மின்காந்தங்களுக்கு மேல சேதமாயிடுச்சு. எல்லாம் சரியாகி மறுபடி அடுத்த டெஸ்டுக்கு இன்னும் வருஷங்கள் ஆகலாம். ஆனால் விஞ்ஞானம் "கடவுளை"த் தேடும் வேலையத் தொடர்ந்து செய்யும். விஞ்ஞானமும் மெய்ஞானமும் குவியற இடம் ரொம்ப தொலைவுல இல்லைன்னு தோணுது. மெய்ஞானத்துல கடவுளை "உணர" வைக்க முடியும்னா, அதை "காண" வைக்கறது விஞ்ஞானத்துனால முடியலாம். முடிக்கும். இப்பொதைக்கு இந்த Higgs Boson தான் அதுன்னு நாம தேடிக்கிட்டுருக்கோம். அதுவாகவும் இருக்கலாம் (அல்லது அதை விட சூட்சுமமான ஒன்றாகவும் இருக்கலாம்) அந்த ஆதார சக்தியை, மூலப் பொருளைத்தான் நம்ம வேதங்கள் எல்லாம் பரம்பொருள், மூலாதாரம், பரமார்த்த சத்யம், சத்தாமாத்ரம், சத்து அப்பிடின்னெல்லாம் பல பேர்கள்ல சொல்லுது. பார்க்கலாம்...... சரி... ரொம்ப நீளமாப் போச்சு.... ரொம்பவே மேலோட்டமா சொல்லியிருக்கேன். ஆழமா சொன்னா அறிவியல் பாடம் எடுக்கற மாதிரி ஆயிடும். சொல்ல நான் ரெடிதான்.... (கடைக்கு வர நாலு கஸ்டமரும் ஒடிட்டா?? :)))) இன்னும் சில interesting விஷயங்கள் - பொருள் ; அபொருள் (matter ; anti-matter) - சொல்ல வேண்டியிருக்கு... அடுத்த இடுகைல....
டிஸ்கி : இதைப் படிச்ச பிறகு, நான் ஆத்திகனா நாத்திகனா, அறிவியலாளனா ஆன்மீகவாதியான்னு கேட்டா.... முதல் பத்தில சொன்ன மாதிரி ரெண்டுமே complimenting each other.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com