கிரிக்கெட் உலகில் இந்த காலகட்டம் பரபரப்புக்கு குறைவில்லை.ஆஷசின் முதல் போட்டியில் இங்கிலாந்து வேண்டுமென தாமதப்படுத்தியதாக பாண்டிங் குற்றம் சுமத்த நாங்கள் அப்படி வேண்டுமென செய்யவில்லை என இங்கிலாந்து கப்டன் மறுபக்கம். அதன் பின் பிளிண்டோபின் ஓய்வு என தேவையற்ற நிகழ்வுகளுக்கு மத்தியில் இதெல்லாம் தேவையா என கேட்கவைத்த நிகழ்வு தான் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் வினோத் காம்ப்ளி உலகக்கிரிக்கெட்டின் இன்றைய கடவுளாக போற்றப்படும் சச்சினை பற்றி கூறிய சில கருத்துக்கள்.



அந்த showவில் காம்ப்ளி சச்சினை பற்றி சொன்னதை எப்படி ஏற்க முடியும். எத்தனை தடவை காம்ப்ளி இந்திய அணிக்குள் மீள வர சச்சின் காரணமாக இருந்தார் என்பது கிரிக்கெட்டை தெரிந்த அனைவருக்கிம் தெரியும்.(இதேபோலத்தான் தினேஷ் மொங்கியா, அஜித் அகார்கர் போன்றவர்களுக்கும் சச்சின் ஆதரவு வழங்கி இருக்கின்றார்.) அப்படி இருக்கும் போது கேவலம் ஒரு கோடி ரூபாவிற்காக (அந்த நிகழ்ச்சியில் உண்மையை பேசி வெற்றி பெற்றால் வழங்கும் பரிசுத்தொகையாம் அது.) தன் உயிர் நண்பனாக பள்ளிக்காலம் முதல் இருந்து வந்தவரை பற்றி எதுவெல்லாம் சொல்லக்கூடாதா அதை எல்லாம் சொல்லி முடித்து விட்டார்.
சரி அவர் மனதில் இருக்கும் ஆதங்கத்தை ஏதோ கொட்டி விட்டார். என்று அந்த பிரச்னையை ஓரளவிற்கு ஒரு சிலர் அதை ஒதுக்கித் தள்ளிக்கொண்டிருக்கும் போது நேற்று முன்தினம் காம்ப்ளி வழங்கிய பேட்டி ஒன்றில் தன்னால் சச்சினுக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்திற்கு வருத்தம் தெரிவித்திருக்கின்றார். அதற்கு பிறகு அவர் சொன்னதுதான் நடிகர்களையே விஞ்சி நிற்க்கின்றது. அதாவது சச்சினைப் பற்றி தான் அப்படி எதுவும் சொல்லவில்லையாம். அது முற்றிலும் தவறான செய்தியாம். தனக்கும் சச்சினுக்கும் கடந்த 26ஆண்டுகளாக நல்ல நட்பு இருந்து வருகின்றது. மிக விரைவில் அவரை சந்தித்து இதை பற்றி விளக்கப்போவதாக சொல்லி இருக்கின்றார். இவை எல்லாவற்றுக்கும் சச்சின் தன் வழக்கமான அமைதியை காத்துக்கொண்டிருப்பதே அவரின் பெருந்தன்மை தான்.
