27 ஏப்ரல் 2009
ஆஸ்பத்திரியில் அனுமதி தந்தை உதவியில்லாமல் அவதிப்படுகிறேன் - அசின்
அசின் சினிமா கால்ஷீட் விஷயங்களை கவனித்து கொள்பவர் அவரது தந்தை ஜோசப் தொட்டும்சல். தமிழில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி” யில் அறிமுகமானபோது ஜோசப்பும் கேரளாவில் தொழில் வியாபாரங்களை பிறரிடம் ஒப்படைத்து விட்டு சென்னை வந்து விட்டார். படப்பிடிப்பில் அசின் கூடவே செல்வார். நட்சத்திர ஓட்டல்களில் தங்கும்போதும் பக்கத்திலேயே ரூம் போட்டு கவனமாய் மகளை கண்காணிப்பார். இவர் அனுமதி இல்லாமல் அசினை எவரும் சந்தித்து விட முடியாது. அசின் செல்போனும் ஜோசப் கையில்தான் இருக்கும்.
அசினுடனேயே சதா ஒட்டிக்கொண்டு திரிவதால் ஜோசப் மீது ஹீரோக்கள், இயக்குனர்களுக்கு வெறுப்பு உண்டு. இந்தி “கஜினி” மூலம் வடஇந்தியாவில் பிரபலமானதால் இந்தி கதாநாயகர்கள் அசினுடன் ஜோடி சேர மொய்க்கின்றனர். ஆனால் யாரையும் கிட்டே நெருங்க விடாமல் தானே புதுப்படங்கள் பற்றி பேசி தீர்க்கிறார். மொத்த வேலையையும் தந்தையிடம் ஒப்படைத்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திய அசினுக்கு தற்போது தந்தை ஜோசப் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன. ஆஸ்பத்திரியில் படுக்கையிலேயே இருக்கிறார். ஜோசப்புக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. தாய் கேரளாவில் இருந்து வந்து அசினுக்கு துணையாக தங்கி இருக்கிறார்.
தந்தை உதவி இல்லாமல் தவிப்பது பற்றி அசின் சொல்கிறார்.
எனக்கு எல்லாமே அப்பாதான். சினிமா கால்ஷீட்களை அவர்தான் கவனித்து கொண்டார். என் கூடவே எப்போதும் இருப்பார். தந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் நான் சிரமத்துக்கு ஆளாகியுள்ளேன். அவர் இல்லாமல் எந்த புதுபடத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. கேரளாவுக்கு போய் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போட முடிவு செய்து இருந்தேன். அதுவும் முடியாமல் போய்விட்டது.
சினிமாவுக்கு வந்து முதல் தடவையாக தந்தை இல்லாமல் தனியாக பெங்களூர் சென்று வந்தேன். வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மும்பை திரும்பியதுமே ஆஸ்பத்திரிக்கு ஓடோடி போய் தந்தையை பார்த்தேன்.
தந்தை உதவி இல்லாமல் என் வேலைகள், பாதிக்கப்பட்டு உள்ளன. என் சம்பந்தப்பட்ட விஷயங்களை யார் துணையுமின்றி நானே கவனித்துக் கொள்ள பழகி வருகிறேன்.
இவ்வாறு அசின் கூறினார்.