சினிமாவை விட்டு சற்று விலகியிருக்கும் மாளவிகாவை சீரியலில் நடிக்க கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களாம். அவர்தான் வேண்டாமே என்று தயங்கி வருகிறாராம்.
திருமணமாகி மும்பையில் செட்டிலாகி விட்ட மாளவிகா இப்போது ஒரு ஆண் குழந்தைக்கு
அம்மா
. இதனால் நடிப்புக்கு சற்
று இடைவெளி விட்டுள்ளார்.

மகனை கவனிக்க அவருக்கு நேரமே போதவில்லையாம். இந்த நிலையில் சும்மாதானே இருக்கிறீர்கள்,
டிவி
சீரியல்களில்நடிக்கலாமே என்று சிலர் தூது விட்டுள்ளனர்.
ஆனால் மாளவிகா அவற்றை ஏற்கும் மூடில் இல்லையாம். பையனைக் கவனிக்கவே நேரம் போதவில்லை. பிறகு எப்படி நடிக்க முடியும்.
அதிலும்
டிவி
சீரியல் என்றால் வருடக்கணக்கில் இழுப்பார்கள். கண்டிப்பாக தொடர்ந்து நடிக்க முடியாது என்கிறார் மாளவிகா.
திருமணமான பின்னர் அவர் நடித்துள்ள ஒரே படம் கார்த்திகை. விரைவில் அப்படம் திரைக்கு வருகிறது. அதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து விட்டு, தனக்கு நேரம் கிடைக்கும்போது நடிக்கும் வகையிலான திரைப்பட வாய்ப்புகளை மட்டும் ஏற்கும் மூடில் இருக்கிறாரம் மாளவிகா