தனது நைட் ரைடர்ஸ் அணி மோசமாக விளையாடுவதால் நொந்து போன ஷாரூக்கான் இந்தியாவுக்கு வந்துவிட்டார். அந்த அணி ஒழுங்காக விளையாடாத வரை தென் ஆப்ரிக்காவுக்கே திரும்பமாட்டேன் என்றும் அவர் சபதமெடுத்துள்ளார்.
கொல்கத்தாவின் நைட் ரைடர்ஸ் அணிக்கு ஷாரூக்கான் உரிமையாளராக உள்ளார். தென்னாப்பிரிக்காவில் நடக்கும்
ஐபிஎல்
போட்டிகளில் கொல்கத்தா ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே அந்த அணி வெ
ன்றுள்ளது.

மேலும் அந்த அணியிலிருந்து கங்குலி
நீக்கப்பட்டதால் நிறைய சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. இதனால் வெறுத்துப் போன ஷாரூக்கான் தென் ஆப்ரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டார்.
எனது அணி தொடர்ந்து தோற்று வருவதைப் பார்க்க முடியவில்லை. அடுத்து அவர்கள் ஜெயித்தால் மட்டுமே தென் ஆப்ரிக்கா வருவேன் என்று கூறியுள்ளார் கிங் கான்!
விரைவில் அப்படி ஒரு சூழலை தனது அணி உண்டாக்கித் தருவார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.