Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

02 மே 2009

பழிக்குப் பழி... காமெடிகளின் வில்லத்தனம்!

பிஎஸ் வீரப்பாவை மிஞ்சும் அளவுக்கு சத்தமாகச் சிரிக்கிறாராம் வடிவேலு... காரணம் படிக்காதவனில் தன் வேடத்தைப் பிடித்த விவேக்கை கந்தசாமியில் பழி வாங்கிவிட்டதற்காக! இதென்ன கூத்து... தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் வடிவேலுதான். ஆனால் இயக்குநர் சுராஜ் மற்றும் ஹீரோ தனுஷுடன் ஏற்பட்ட மோதலால் முறுக்கிக் கொண்டு போனார் வடிவேலு. சரி... யாராவது வந்து சமாதானம் செய்தால் நடிக்கலாம் என்ற நினைப்பிலிருந்த வடிவேலுவை, விவேக் மூலம் அவமானப்படுத்தினர். வடிவேலு செய்திருக்க வேண்டிய அந்த உதார் ரவுடி கேரக்டரை விவேக் செய்து பெயர் தட்டிக் கொண்டார். இப்போது வடிவேலுவின் முறை... விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாய் உருவாகியுள்ள கலைப்புலி தாணுவின் கந்தசாமியில் முதலில் நடிப்பதாக இருந்தவர் விவேக். ஆனால் கடைசி நேரத்தில் நிஜமான இம்சை அரசனாய் விவேக் மாறிவிட, படத்தின் மெயின் பகுதிகளைப் படமாக்கிய பிறகு, விவேக் நீக்கப்பட்டதாக அறிவித்தார் இயக்குநர் சுசி கணேசன். அவருக்குப் பதில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்தார்கள். வெறும் 5 நாட்களில் அட்டகாசமான காமெடிக் காட்சிகளை தனியாகப் படமாக்கிவிட்டார்களாம். 'நாங்கள் நினைத்துப் பார்க்காத புதிய பரிமாணத்தில் பின்னியிருக்கிறார் வடிவேலு...' என்று பாராட்டித் தள்ளுகிறார்கள் தாணுவும், சுசியும். படிக்காதவன் காயத்துக்கு கந்தசாமியில் மருந்து கிடைத்த சந்தோஷத்தில், 'விட்ருவோமா... நாங்களும் மதுரைதான்' என்று காலரைத் தூக்குகிறார் வடிவேலு!
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com