![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7bhrtAYqCPtsJvf0WIKckljgiv2adzPbpsUmS1fzNHoW5N_3irnQfegWX2V-buq0qbZ-Varr_ocUqoqwrBBXfRNF65iGNl51XsqYeoYYE1pMWuL6urxX2HzKKGp2tySF70lrZfdntXTIO/s320/04-azhagiri-200.jpg)
04 ஆகஸ்ட் 2009
ஜகன்மோகினி ஆடியோ-மதுரையில் வெளியீடு!
இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ஜகன்மோகின் படத்தின் ஆடியோவை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி வெளியிட்டார்.
நமீதா நடித்துள்ள இந்தப் படம் எண்பதுகளில் ஜெயமாலினி நடிப்பில் வெளியான ஜெகன்மோகனியின் ரீமேக். என் கே விஸ்வநாதன் இயக்கியுள்ளார்.
ராஜா, நிலா, வடிவேலு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு மதுரையில் நடந்தது. இதன் துவக்க விழாவையும் மதுரையில் வைத்து அழகிரிதான் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் விஸ்வநாதன், தயாரிப்பாளர்கள் ராம நாராயணன், முரளி, சீனிவாசன், சித்ரா லட்சுமணன், சுரேஷ், நடிகர் வடிவேலு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.