எனது முன்னாள் காதலர் அபிஷேக் அவஸ்திக்கும் நிச்சயம் அழைப்புண்டு. ஆனால் எனது தாயாரை மட்டும் நான் அழைக்கப் போவதில்லை என்று கூறுகிறார் ராக்கி சாவந்த்.
இந்திய திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக, சுயம்வரம் நடத்தி தனது மணாளனை தேர்வு செய்துள்ளார் ராக்கி சாவந்த்.
படு கோலாகலமாக ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தி நேரடியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்ய மாலை போட்டு எலேஷை தனது மணமகனாக தேர்வு செய்துள்ளார் ராக்கி.
சுயம்வரம் முடிந்த அன்றே திருமணமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. திருமணத்தைக் காண ராக்கியின் முன்னாள் காதலர் அவஸ்தியும் வந்திருந்தார். ஆனால் எலேஷ் , ராக்கியுடன் நன்கு பழகிப் புரிந்து கொள்ள அவகாசம் கேட்டதால் நிச்சயதார்த்தத்தை மட்டும் முடித்துக் கொண்டு திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்.
அவஸ்தியின் வருகை குறித்து ராக்கி கூறுகையில், நான் அவஸ்தியை முற்றிலும் மன்னித்து விட்டேன். அவர் வந்திருந்தார் என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டு போய் விட்டேன். அவர் வந்தது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் நிச்சயம் அவரை வரவேற்றிருப்பேன்.
நேற்று வரை அவர் எனது காதலர். இன்று அவர் எனது நல்ல நண்பர் என்றார் ராக்கி.
ஆனால் தனது தாயாரை மட்டும் மன்னிக்கவே மாட்டாராம் ராக்கி. இதுகுறித்து கூறுகையில், எனது தாயாரைப் பற்றி மட்டும் கேட்காதீர்கள். அவரால் நான் நிறைய அவஸ்தைப்பட்டு விட்டேன். அவரால் ஏற்பட்ட வலியை மறக்க முயலுகிறேன். நிச்சயம் அவரை நான் திருமணத்திற்கு அழைக்கப் போவதில்ல என்றார் கோபமாக.
திருமணத்திற்குப் பின்னர் கனடாவில் செட்டிலாகும் எண்ணம் ராக்கியிடம் இல்லையாம். எலேஷ் கனடாவில்தான் தொழில் புரிந்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
எனக்கென்று இங்கு ஒரு தொழில் உள்ளது. அதை நான் பார்க்க வேண்டும். எனக்காக வாழ ஆர்வமாக உள்ளவர் எலேஷ். எனவே அவர்தான் எப்படி இதை மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும் என்கிறார் புன்னகையுடன்.
டோரன்டோவில் எலேஷின் சகோதரிக்கு கல்யாணம் நடைபெறவுள்ளதாம். அதற்கு எலேஷுடன் ஜோடியாக கலந்து கொள்ளப் போகிறாராம் ராக்கி. |