இதில் சிறப்பு விருந்தினராக மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சர் முக அழகிரி பங்கேற்றார்.
வைரமுத்துவைப் பாராட்டிப் பேசிய அவர் கூறியதாவது:
சென்னையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடந்த பட்டமளிப்பு விழாவில் நான் கலந்து கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் கவிஞர் வைரமுத்துவின் திரை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
ஒரு தம்பி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டாலும் இன்னொரு தம்பி வைரமுத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் பழைய பாடல்களை விரும்பி கேட்பவன். புகழ் பெற்ற பழைய கவிஞர்கள் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம், ஜி.ராமநாதன், கண்ணதாசன் போன்ற வர்களின் பாடல்களை ரசித்து கேட்பேன்.
இவர்களின் மொத்த உருவமாக வைரமுத்து இருக்கிறார். தமிழ்திரை உலகத்திற்கு கவிஞர் வைரமுத்துவின் சேவை தொடர்ந்து தேவை, என்று பாராட்டினார்.
வைரமுத்து பேசுகையில், அண்ணன் மு.க. அழகிரி மதுரைக்கு மட்டுமல்ல, மக்களுக்கே காவலன் என்று பாராட்டினார்.
தொடர்ந்து பேசுகையில், தன்னுடைய சின்னச் சின்ன ஆசைகள் பாடல்தான் ஏஆர் ரஹ்மானை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றதாகக் குறிப்பிட்டார். |