பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். குடியரசு தினத்தன்று இவ்விருதுகளை ஜனாதிபதி வழங்குவார். இவ்வாண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பத்திரிக்கையாளர் அபினவ் பிந்த்ரா, சாம் பிட்ரோடா,சேகர் குப்தா, லெப்டினட் சதீஷ் நம்பியார், சி.கே.பிரகலாத், சிற்பி கணபதி ஸ்தபதி, நடனக் கலைஞர்கள் தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன், பத்திரிகையாளர் சேகர் குப்தா, எழுத்தாளர் ஜெயகாந்தன், விஞ்ஞானி காஞ்சிவரம் ரங்காச்சாரி, சமூக சேவகி சரோஜினி வரதப்பன் உள்ளிட்ட 30 பேர் பத்மபூஷன் விருதைப் பெறுகிறார்கள்.
ஐஸ்வர்யா ராய் பச்சன், அக்ஷய் குமார், மகேந்திரசிங் தோனி, ஹர்பஜன் சிங், பங்கஜ் அத்வானி, ஹாக்கி வீரர் பல்பிர் சிங் குல்லார், பாடகர் உதித் நாராயணன், நடிகர்கள் விவேக், திலகன், இசைப் பாடகி அருணா சாய்ராம், எழுத்தாளர் ஐராவதம் மகாதேவன், சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி, பி.ஆர்.கிருஷ்ணகுமார், டாக்டர்ஆர்.சிவராமன், டாக்டர் சேக்காதர், நூர்தின், ஏ.சக்திவேல் உள்ளிட்ட 93 பேர் பத்மஸ்ரீ விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.