அவுஸ்திரேலியா அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி எட்டு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இன்னும் ஒரு போட்டி எஞ்சி இருக்கும் நிலையில் ஜந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என வென்றுள்ளது .
இன்று அடிலேட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற பகல் -இரவு போட்டியில் நாணயசுளர்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடி 48 ஓவர்களில் சகல விகெட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றது.ரிக்கி பொண்டிங் மட்டும் கூடுதலாக63 ஓட்டங்களைப் பெற்றார்.பந்து வீச்சில் ஸ்டேன் ,நிட்டினி தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர். கஷீம் அம்லா
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியினர் வெறும் 38.1ஓவர்களில்
வெற்றிக்கு தேவையான 223ஓட்டங்களை இரண்டு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.அந்த அணியின் சார்பில் ஏபி.டி.வில்லியர்ஸ்82 ஓட்டங்களையும் ,கஷீம் அம்லா 80 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று தென்னாபிரிக்க அணியின் வெற்றியை உறிதி செய்தனர்.அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரையும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆட்டநாயகனாக ஏபி-டி-வில்லியர்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.