Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

27 ஜனவரி 2009

கணனியினுள் வைரஸ் எப்படி வருகிறது....?

போர்னோ சமாச்சாரம், இலவச சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் பாதுகாப்பு. வைரஸ்எழுத்தாளர்கள்' இந்த மூன்றையும் சொல்லிஆசை காட்டித்தான் கம்ப்யூட்டர்பயனாளிகளை மோசம் செய்கிறார்கள். "என் படுக்கையறைக் காட்சிகளைஇலவசமாகப் பாருங்கள்!" என்று ஒரு-மெயில் வரும். அல்லது "இந்தசாஃப்ட்வேரை டவுன்லோட் செய்யுங்கள்! இன்டர்நெட்டில் நீங்கள் விட்டுச் சென்றதடயங்களை நீக்குங்கள்!" அல்லது "ஹலோ, இது மைக்ரோசாஃப்ட்அவுட்லுக்கின் லேட்டஸ்ட் அப்டேட். இதை இன்ஸ்டால் செய்தால் உங்கள்கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருக்கும்" என்று உதவி செய்யப் பார்க்கும். . . இப்படிப்பட்ட -மெயில்களை நம்பி அதில் இருக்கும் அட்டாச்மென்ட்களை க்ளிக்செய்து தொலைப்பவர்கள் பலர். இவர்கள் புண்ணியத்தில்தான் பலவைரஸ்களுக்கு உலகப் புகழ் கிடைக்கிறது. ஐலவ்யூ, மெலிஸா, அன்னாகோர்னிகோவா, சர்கேம் என்று ஆன்லைன், ஆஃப்லைன் உலகங்களைஉலுக்கியெடுத்த வைரஸ்கள் எல்லாம் நம்மை ஏமாற்றித்தான் பரவின. இந்த மாதிரி டிஜிட்டல் கிருமிகள் இப்போது -மெயில் மூலமாக மட்டுமில்லை, இன்ஸ்டன்ட் மெசேஜிங், இன்டர்நெட் ரிலே சாட் (.ஆர்.சி.) போன்ற மீடியங்கள்மூலமும் பரவத் தொடங்கியிருக்கின்றன. அதாவது ஒரு கம்ப்யூட்டர் கிரிமினல்இன்டர்நெட் சேவை நிறுவன அதிகாரி என்ற போர்வையில் ஒரு அப்பாவிகம்ப்யூட்டர் பயனாளிக்கு ஃபோன் செய்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பயனாளி அதை நம்பி அவனிடம் தன் ஃபோன் நம்பர், க்ரெடிட் கார்டு எண்போன்ற ரகசியத் தகவல்களைக் கொடுத்துவிட வாய்ப்பிருக்கிறது. இந்தத்தகவல்களை வைத்துக்கொண்டு அந்த கிரிமினல் என்ன வேண்டுமானாலும்செய்யலாம். இந்த அட்டாச்மென்ட்கள் பயனுள்ள ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் அல்லது எம்.பி.3 ஃபைல் அல்லது கிளுகிளுப்பான படம் என்று நம்ப வைக்கப் பார்க்கின்றன. ஆனால் இவை உண்மையில் ஆபத்தான வைரஸ்கள். இந்த வைரஸ்கள், ட்ரோஜன்கள் ஆகியவற்றை வைத்து ஃபைல்களைஅழிப்பதோடும் மேலும் பல கிரிமினல் வேலைகளுக்கு அஸ்திவாரம்போடுகிறார்கள். இந்த வைரஸ்கள் மூலம் டிஸ்ட்ரிப்யூட்டட் டினையல் ஆஃப்சர்வீஸ் என்ற வகை தாக்குதல் தொடுப்பதும் அதிகரித்திருக்கிறது என்கிறதுசெர்ட். வைரஸ் தாக்கிய கம்ப்யூட்டர்கள் மூலம் இன்னொரு கம்ப்யூட்டரைதாக்குவது டி.டி..எஸ். இன்டர்நெட் அரட்டை நெட்வொர்க்கான .ஆர்.சி. அரட்டை அறைகள், இன்ஸ்டன்ட் மெசஞ்சர் ஆகியவற்றின் பயனாளிகளுக்கு வைரஸ் மெசேஜ்களைஅனுப்பித் தள்ளும் புரோகிராம்களை கிரிமினல்கள் பயன்படுத்துகிறார்கள் என்றுசெர்ட் சொன்னது. .ஆர்.சி. அரட்டை அறைகளில் சில பயனாளிகளைத் தேர்ந்தெடுத்துஅவர்களுக்கு குப்பை மெசேஜ்களாக அனுப்பித் தள்ளுவது, பிறகு அப்படிப்பட்டமெசேஜ்கள் வராமல் தடுக்கும் என்று வைரஸ் சாஃப்ட்வேர் ஒன்றைஅனுப்புவதும் லேட்டஸ்ட் டெக்னிக் என்கிறார் மெக்அஃபி நிறுவனஆராய்ச்சியாளர் ஜிம்மி குவோ. எனவே, யாஹூ மெசஞ்சரிலும் சரி, .ஆர்.சி.யிலும் சரி, சாட் செய்யும்போதுயாரிடம் என்ன ஃபைலைத் தருகிறீர்கள் என்பதில் உஷாராக இருங்கள். உங்கள்ஆர்வக் குறுகுறுப்பு சமயத்தில் ஆபத்தில் முடியலாம்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com