30 ஜனவரி 2009
பேப்பர் இல்லா பேக்ஸ் மெசின் - பானாசோனிக் அறிமுகம்.
தினமும் பிரிண்ட் செய்யப்படுகிற ஒவ்வொரு பேப்பரும்(paper) இந்த உலகத்தைமாசுபடுத்துகிறது என சமீபத்தில் ஒரு கம்ப்யுட்டர் நிறுவனம் ஒரு பொதுவிளம்பரம் ஒன்றை வெளியிட்டது, இமெயில் உள்ள இந்த காலத்திலும் இன்னும்சில பேர் பேக்ஸ் உபயோகப்படுத்தி கொண்டிருக்கின்றனர், அவர்கள்மகிழ்ச்சியடையும் வகையில் பானாசோனிக்(Panasonic) நிறுவனம் பேப்பர் இல்லாத பேக்ஸ் மெசின் ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது.
மெசினை ஒட்டியதிரையில் பெறப்படுகின்ற தகவலை படித்து விட்டு தேவைப் படுகிற போதுபிரிண்ட் செய்து கொள்ளலாம், அது போல் எற்கனவே சேமித்து வைத்த தகவலைமற்றவர்களுக்கு அனுப்பலாம் இதற்கு கம்ப்யுட்டர் உதவி தேவைபடாது மெசினைஒட்டிய திரையில் இவை அனைத்தையும் செய்யலாம்.