செல்வராகவனிடமிருந்து சோனியா அகர்வால் விவாகரத்து கேட்கக் காரணமானவர் எனக் கூறப்பட்ட, ஆண்ட்ரியாவை வைத்து தனது அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் செல்வராகவன்.
இது மாலை நேரத்து மயக்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தின் நாயகன் தனுஷ்.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கார்த்தி - சந்தியா நடிப்பார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் பின்னர் திடீரென்று அந்தப் படம் கைவிடப்படுவதாக அறிவித்த செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் படத்தைத் துவங்கினார்.
கிட்டத்தட்ட 3 வருடங்களையும் 35 கோடிகளையும் விழுங்கிய பின்னும் இன்னும்
படப்பிடிப்பு ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
, கிராபிக்ஸ் என இழுத்துக் கொண்டிருக்கிறது அந்தப் படம்.
இந்த நிலையில் தனது அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார் செல்வராகவன். இந்தப் படத்தின் நாயகன் செல்வாவின் தம்பி
தனுஷ் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
. நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.
விவாகரத்து,
சோனியா ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
வின் குற்றச்சாட்டு என எத்தனை தடங்கல் வந்தாலும் ஆண்ட்ரியா விஷயத்தில் செல்வராகவன் உறுதியாக இருப்பதையே இது காட்டுவதாகக் கூறுகிறார்கள் கோடம்பாக்கவாசிகள்.
இதுவரை திரையில் சொல்லப்படாத ரொமான்டிக் கதை இது என்று
படம் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
குறித்த அறிமுக பேட்டியில் கூறியுள்ளார் செல்வராகவன்.
பார்க்கத்தானே போகிறோம்!