
14 ஜூன் 2009
மிஷ்கின் - நரேன் லடாய்!
மிக நெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குநர் மிஷ்கினும் நடிகர் நரேனும் பிரிந்து வெவ்வேறு பாதைகளில் பயணிக்கத் துவங்கிவிட்டனர்.
மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி மூலம்தான் நரேன் அறிமுகமானார். அடுத்து அவரது இயக்கத்தில் அஞ்சாதே படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் நரேனை மிகச் சிறந்த நடிகராகக் காட்டின. இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைவார்கள் என்று பேசப்பட்டது.
அதற்குள் மிஷ்கினே நாயகனாக மாறிவிட்டார் நந்தலாலா மூலம். ஆனால் அந்தப் படம் எப்போது வரும் என்பது தெரியவில்லை.
இதற்கிடையே, மிஷ்கினுக்கும் நரேனுக்கும் தனித்தனியாக வெற்றிப் படங்களைத் தரவேண்டும் என்ற ஈகோ மோதல் வந்துவிட்டதாம். அதன் விளைவு, நரேன் இரு மலையாளப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவிட, நந்தலாலாவுக்கு அடுத்து தான் இயக்கும் புதிய படத்தில் நரேனை நாயகனாகப் போடாமல் விட்டுவிட்டார்.
யுத்தம் செய் என்ற தலைப்பில் இந்தப் படம் தயாராகிறது. நாயகன் சேரன்!
சூழ்நிலைக் கேற்ற தலைப்போ!
