Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

16 ஜூன் 2009

ஸ்டைல்! ஸ்டைலஸ்டைல்...!

இந்த பதிவு யூத் களுக்கு மட்டுமே இருந்தாலும் யூத் மாதிரி இருக்கிறவங்க (நடிக்கிறவங்க) முயற்சித்து பார்க்கலாம் (முடி இருந்தால்). ;-)
எனக்கு பொதுவாக லேட்டஸ்ட் ட்ரெண்ட்களில் ரொம்ப ஆர்வம், உடை தேர்விலும் எனக்கு நல்ல ரசனை. என் நண்பர்களுக்கு நான் தான் உடை தேர்வாளர், உடை எடுக்க வேண்டும் என்றால் அனைவரும் என்னை அழைத்து செல்வார்கள் அவர்கள் மனைவி மற்றும் அம்மாவிற்கு என்றால் கூட.
பெண்களுக்கும் உடை தேர்வு செய்வதில் சிறப்பாகவே தேர்வு செய்வேன், என் மனைவி அக்கா மற்றும் அம்மாவிற்கு அவர்களின் வயதிற்கு தகுந்தமாதிரி தேர்வு செய்வேன், அதனால் அவர்கள் திருமணங்களில் இதை அணிந்து சென்றால் யாரும் கேட்கும் போது இதை தம்பி தான் எடுத்துக்கொடுத்தான் என்றால் அவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். இதை அவர்கள் என்னிடம் கூறுவார்கள், நிறைய பேர் நல்லா இருக்குன்னு சொன்னாங்க என்று. ஆஹா! நம் தேர்வுக்கு இத்தனை ரசிகர்களா என்று கொஞ்சம் பெருமையாக தான் இருக்கும்.
நான் இப்போது கூறப்போவது உடை பற்றி அல்ல ஹேர் ஸ்டைல் பற்றி. ஜெய்ஹிந்த் படத்துல செந்தில் ஒரு ஸ்டைல் ல வருவாரு, கவுண்டர் அதை பார்த்து விட்டு டேய்! என்னடா தலை மேல கீரி புள்ளை படுத்துட்டு இருக்கு என்று நக்கல் செய்வார். அப்போது அது கிண்டலாக தெரிந்து இருந்தாலும் தற்போது மேலை நாடுகளில் அது தான் தற்போதைய லேட்டஸ்ட் ஃபாஷன். எனக்கும் சிங்கப்பூர் ல் வந்த புதிதில் என்னடா! இப்படி முடிய வெட்டிட்டு சுத்திக்கிட்டு இருக்காங்க என்று சிரிப்பாக இருந்து. தற்போது அதை பார்த்து பழக பழக அதுவும் நன்றாகவே உள்ளது. இதை நம்மில் பலரால் ஏற்று கொள்ள முடியாது, காரணம் நாம் இன்னும் அந்த அளவிற்கு மனதளவில் தயாராகவில்லை.
இங்கே நாம் சில ஹேர் ஸ்டைல் பற்றி பார்ப்போம், இது தற்போது படித்துக்கொண்டு இருக்கும் உங்களுக்கு கிண்டலாகவும் நக்கலாகவும் தெரிந்தாலும் விரைவில் நம் ஊரிலும் இதை போல ஹேர் ஸ்டைல் வரப்போகிறது, ஏற்கனவே ஒரு சிலர் "இப்படி" இருக்கிறார்கள். இத்தகைய ஹேர் ஸ்டைல் க்கு ஒரு பிரச்சனை கொஞ்சம் கலராகவும் முடி ஸில்க்கியாகவும் இருக்க வேண்டும் அப்போது தான் ஒரு செக்ஸி லுக் கிடைக்கும் (நாம் என்ன பெண்களா! செக்ஸி லுக் வர என்று கேட்டால் உங்களுக்கு ரொம்ப வயதாகி விட்டதாக அர்த்தம்).
ஸ்டைல் என்றவுடன் நினைவிற்கு வருவது சூப்பர் ஸ்டார் தான். ரஜினியின் ஹேர் ஸ்டைல் (தற்போது காலி ஆகி விட்டது) பலரால் விரும்பப்பட்டது, ஆனால் இந்தியாவில் நடிகர்களில் ஹேர் ஸ்டைல் என்றால் நம் அனைவரின் நினைவிற்கு வருவது அமீர் கான் தான். பல வித விதமான ஹேர் ஸ்டைல்களை தனது படங்களில் அறிமுகப்படுத்தி இருப்பார். கவனிக்க தக்க முதல் படம் என்றால் "தில் சாத்தா ஹை" பற்றி குறிப்பிடலாம். கஜினி தமிழில் ஏற்கனவே சூர்யா மொட்டை முறையில் ஹேர் கட் செய்து இருந்தாலும், அதை அமீர் கான் செய்த போது கிடைத்த வரவேற்பு அனைவரும் அறிந்தது.
மேலை நாடுகளில் ஹேர் ஸ்டைல் பலரால் விளம்பரப்படுத்தப்பட்டாலும் கால்பந்து விளையாட்டு மன்னன் டேவிட் பெக்காம் குறிப்பிடத்தக்கவர், இவருடைய ஹேர் ஸ்டைல் உலக அளவில் பிரபலம். கால்பந்து விளையாட்டில் இவருக்கு இருக்கும் ரசிகர்களை போல இவரது ஹேர் ஸ்டைல் க்கும் உலகளவில் பல ரசிகர்கள், இவரது ஸ்டைல் பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.
டேவிட் பெக்காமின் இந்த ஹேர் ஸ்டைல் ற்கு ஏகப்பட்ட ரசிகர்கள், குறிப்பாக பெண்கள். பல பெண்கள் இவர் மேல் பைத்தியமாக இருக்கிறார்கள், அதற்க்கு இதை போன்ற செக்ஸி ஹேர் ஸ்டைல் முக்கிய காரணம். ஆளும் பெர்சனாலிட்டியாக இருக்கிறார் என்பது வேறு விஷயம்.
இந்த ஸ்டைல் தான் எனக்கு ரொம்ப பிடித்த ஸ்டைல், ஸ்பைக் ஸ்டைல் னு சொல்லுவாங்க இதை. இதை நம்ம ஊர்ல மேல் தட்டு மக்கள் ஒரு சிலர் வைத்து இருக்கிறார்கள், ரொம்ப casual ஆக இருக்கும்.
எனக்கு விதவிதமா ஹேர் ஸ்டைல் எல்லாம் வைத்துக்கணும் என்று ரொம்ப ஆசைங்க ஆனால் அந்த அளவிற்கு அடர்த்தியா முடி இல்லைன்னு வருத்தபடுகிறவங்க இந்த மாதிரி ஷார்ட்டா வைத்துக்கொள்ளலாம். இந்த ஹேர் ஸ்டைல் கருப்பா ஒல்லியா இருக்கிறவங்க வைக்க முடியாது, நன்றாக இருக்காது. அதையும் மீறி வைத்தால் காதல் படத்தில் ஹீரோ வாய்ப்பு கேட்டு வருவாரே ஒருத்தர் அவரை போல இருக்கும் :-) தேவையா! மனதை தேத்திக்குங்க ;-)
இது தாங்க நம்ம கவுண்டர் கிண்டல் செய்த ஹேர் ஸ்டைல். இதை போல சிங்கப்பூர் ல பல பேர் வைத்து இருக்காங்க, முதலில் என்னவோ போன்று தெரிந்தாலும் இப்போது இது பிடித்து விட்டது. நம்ம ஊர்ல இதை போல வர ரொம்ப காலம் ஆகும், இதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இன்னும் மக்களிடையே மன பக்குவம் இல்லை.
இந்த ஹேர் ஸ்டைல் வைக்க உங்களுக்கு உங்க முடி ஸில்க்கியாக இருக்க வேண்டியது ரொம்ப அவசியம், அப்புறம் கொஞ்சம் கலராக இருக்க வேண்டும் அப்போது தான் ஒரு ரிச் லுக் இருக்கும். இதை போல ஹேர் ஸ்டைல் பெண்களை (girls) கவரும்.
இந்த வகை ஹேர் ஸ்டைல் வைத்துக்கொள்ள நம்ம ஊரில் எந்த தடையும் இல்லை, யாரும் எதுவும் கூற மாட்டார்கள். எனவே தாராளமாக வைத்துக்கொள்ளலாம். வெய்யில் காலங்களுக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல். உடற்பயிற்சி உடம்பாக இருந்தால் ஸ்மார்ட்டாக இருக்கும்.
குழந்தைகளுக்கும் தற்போது வித விதமா அவர்களது பெற்றோர்கள் ஹேர் ஸ்டைல் பண்ணுறாங்க, ஒருவேளை தங்களால் முடியாததை தங்கள் குழந்தைகள் மூலம் செய்து கொள்கிறார்களோ என்னவோ. ஹி ஹி என் பையன் நிலைமைய நினைத்தால் தான் பாவமா இருக்கு..:-)) தற்போது சலூன் களில் குழந்தைகளுக்கு என்றே பலவிதமாக ஹேர் ஸ்டைல் உண்டு. குழந்தைகளுக்கு எந்த மாதிரி முடி வெட்டினாலும் அழகு தான், அதுவும் ஸில்க்கியான முடியாக இருந்து விட்டால் சொல்லவே தேவையில்லை.
இந்த ஹேர் ஸ்டைல் குழந்தைகளுக்கு ரொம்ப அழகா இருக்கும், நம் ஊர் வெய்யில் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு தலை விரைவில் வேர்த்து சளி பிடித்துக்கொள்ளும். எனவே அதிகளவில் முடி வைக்க முடியாது.
என் பையனுக்கு முடி இன்னும் வெட்ட ஆரம்பிக்கவில்லை, வெட்டினால் இப்படி தான் கத்துவான் ஹா ஹா ஹா.
டிஸ்கி
நமக்கு பிடித்த எந்த ஹேர் ஸ்டைல் ம் வைக்கலாம், அதெல்லாம் வைக்கும் முன்பு நம் உடலுக்கும் நம் கலருக்கும் உயரத்திற்கும் ஏற்றதா எனபதை ஒருமுறை யோசித்துக்கொள்வது நல்லது. ஆசை படுவதில் தவறில்லை ஆனால் அதற்க்கு பொருத்தமானவரா நாம் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com