நடிகர் விஜயகுமார் - மஞ்சுளாவின் இளைய மகள் ஸ்ரீதேவிக்கும்,
ஆந்திரா ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த நரசிம்மராவ்-உமா தம்பதியரின் மகன் ராகுலுக்கும் இன்று காலை சென்னையில்
திருமணம் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
நடந்தது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடந்த இந்த திருமணத்துக்கு காலை 7.30 மணிக்கே மனைவி லதாவுடன் வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

புதுமணத் தம்பதிகளை ஆசீர்வதித்த ரஜினி, அவர்களுக்கு தனது பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.
அதேபோல நடிகர் கமல்ஹாசனும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதித்தார்.
நடிகர் சங்கத் தலைவர்
சரத்குமார் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
, நடிகர்கள் பிரபு, பாக்யராஜ், சத்யராஜ், ராதாரவி, தியாகு, சின்னி ஜெயந்த், வையாபுரி, விஜயக்குமார், நடிகைகள் மீனா, பூர்ணிமா, வாணிஸ்ரீ, சங்கவி, மகேஷ்வரி, தயாரிப்பாளர் அமுதா துரைராஜ், தொழிலதிபர் பழனி ஜி பெரியசாமி உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் வந்திருந்து வாழ்த்தினார்.
நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர்
ரஜினிகாந்த் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
, ராதாரவி ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.