Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

19 ஜூன் 2009

இகோர் ஃபியோடோரோவிச் ஸ்ட்ராவின்ஸ்கி

இசையால் வசமாகா இதயமெது என்பார்கள் இல்லையா..? குறிப்பிட்ட காலப்பகுதியில், இவ்வுலகின் இசையுள்ளங்கள் பலவற்றைத் தன் இனிய இசைக்கோலங்களால் கட்டிப்போட்ட, உலகம் போற்றும் ஒரு மாபெரும் இசைக்கலைஞன் பிறந்தது இன்றைய நாளில். இதனைக் கெளரவிக்கும் வகையிலேயே கூகிள் இணையத்தளம் தன்னுடைய குறியீட்டு இலட்சினையை (logo) இன்று வெளியிட்டிருக்கிறது.

பத்தொன்பதாம்நூற்றாண்டில் பிறந்து, இருபதாம்நூற்றாண்டில் மறைந்த இசைக்கலைஞனதான் இகோர் ஃபியோடோரோவிச் ஸ்ட்ராவின்ஸ்கி (Igor Fyodorovich Stravinsky). 1882ம் ஆண்டு, ஜுன் 17ந் திகதி, ரஷ்யாவில் பிறந்த இகோர் ஃபியோடோரோவிச் ஸ்ட்ராவின்ஸ்கி சிறந்தவொரு இசையமைப்பாளர் .

சென்ற நூற்றாண்டான 20 ஆம் நூற்றாண்டில், உலகில் மிகச் செல்வாக்குச் செலுத்திய இசையமைப்பாளராகக் கருதுகிறார்கள். 20 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க முதல் நூறு மனிதர்களுள் ஒருவாராக 'Time' சஞ்சிகை தெரிவு செய்து கெளரவித்திருக்கிறது. இசையமைப்பாளர் , பியானோக் கலைஞர், நிகழ்ச்சி இயக்குனர், என முப்பரிமானப் புகழ்மிமக்கவர் எனப்புகழப்படுமிவர், 1910ல் ஒரு பலே நடன நிகழ்ச்சிக்கு இசையமைத்ததன் மூலம் முதலில் உலகின் கவனத்தை ஈர்த்தார்.

பின்னர் தொடச்சியாக "வசந்தத்தின் சடங்கு" ("The Rite of Spring") என்னும் நடன நிகழ்ச்சிக்காக அவர் வடிவமைத்த இசையமைப்பு, இசையமைப்புத் துறையில் ஒரு புரட்சியாக அமைந்ததாகச் சொல்லப்படுகிறது. இதுவே அவரை இசைப் புரட்சியாளர் என அடையாளப்படுத்தியது.பின்னால் வந்த பல இசையமைப்பாளர்களின் ஆதர்சமாக விளங்கிய இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி, 1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ந்திகதி, தனது எண்பத்தியொன்பதாவது வயதில் மறைந்தார்.

அவரது இசைக்கோப்பு ஒன்றை பின்னாளில் மற்றுமொரு புகழ்மிகு கலைஞர் இசையமைத்த பதிவினைக் கீழே கேட்கலாம்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com