Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

23 ஜூன் 2009

Twenty-20(40!) உலககோப்பை கிரிக்கெட் சிறு அலசல்

ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் கடைசியாக இலங்கை என்று வெற்றி பெரும் அணிகளை எதிர்பார்த்து இருந்த அனைவரின் நினைப்பிலும் மண்ணை அள்ளி போட்டு விட்டு அசத்தலாக கோப்பையை "பாக்" அணி கைப்பற்றி வெற்றி வாகை சூடி விட்டது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா பேட்டிங்கை தேர்வு செய்தார், இலங்கைக்கு பாக் ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. இந்த தொடர் முழுவதும் ஜொலித்த தில்ஷன் ரன் எதுவும் எடுக்காமல் முக்கிய போட்டியான இதில் "டக்" அவுட்டானார் இளம் வீரர் முகமது அமர் பந்தில் அதுவும் முதல் ஓவரிலேயே. அதன் பிறகு அப்துல் ரசாக் மூன்று விக்கட்டுகள் விரைவில் எடுத்து இலங்கை அணியின் துவக்க வீரர்களை நிலைகுலைய செய்தார், இதன் பிறகு இலங்கை பாடு திண்டாட்டமாகி விட்டது, அணியின் ரட்சகனாக சங்ககரா திறமையாக சமாளித்து விளையாடினார் ஆனால் அவருக்கு அவர்கள் தரப்பில் மாத்யுஸ் தவிர யாரும் சரியான ஒத்துழுழைப்பு தராததால் அதிகளவில் ஓட்டங்களை குவிக்க முடியவில்லை. கடைசியாக 138 ஓட்டங்கள் எடுத்து தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டது.
பாக் அணியில் துவக்க வீரர்களான கம்ரன் அக்மல், ஹசன் இருவரும் நல்ல துவக்கம் தந்ததால் எந்தவித நெருக்கடியும் பாக்கிற்கு ஏற்படவில்லை. கடைசியில் அப்ரிடி சோயப் மாலிக் இருவரும் எளிதாக வெற்றியை உறுதி செய்தனர். எந்த வித பரபரப்பும் இல்லாமல் சாதாராணமாக முடிந்தது.
போன முறை இறுதி போட்டி வரை வந்த பாக் இந்த முறை உலக கோப்பையை வென்று சாதித்து விட்டது.
எனக்கு இந்த இரண்டு அணிகளுமே பிடிக்காது, இலங்கை அணி தற்போதைய சர்ச்சையால், பாக் எப்போதும் சர்ச்சையால், இவர்கள் இருவரும் இறுதி போட்டிக்கு வந்ததுமே எனக்கு செம கடுப்பாகி விட்டது. தற்போதைய கடுப்பு இலங்கை அணி மீது அதிகம் இருந்ததால் பாக் வெற்றி பெற்றதால் கொஞ்சம் அல்ப சந்தோசம் அடைந்து விட்டேன்.
நமக்கு பிடிக்கிறது பிடிக்கலை அது வேற விஷயம் ஆனால் திறமைசாலிகள் வெற்றி பெற்றார்கள் எனவே என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாக் அணிக்கு.
நம் இந்திய அணி முதலில் இருந்தே குழு மனப்பான்மையுடன் விளையாடவில்லை, சேவக் நீக்கம், சரியான துவக்கம் இல்லாதது போன்ற காரணங்களால் இந்திய அணி குழப்பத்திலேயே இருந்தது. விளையாடியவர்களும் போட்டி மனப்பான்மையுடன் விளையாடியதை போல தெரியவில்லை, எதோ உள்ளூர் போட்டிகளில் விளையாடும் எண்ணத்துடன் ஏனோ தானோ வென்று விளையாடி சொதப்பி பல கோடி இந்திய ரசிகர்களின் இதயங்களை தங்கள் பொறுப்பற்ற தனத்தால் நொறுக்கி விட்டார்கள். வெற்றி தோல்வி என்பது விளையாட்டில் சகஜம் என்றாலும் கவுரவமாக தோற்று இருந்தால் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை கேவலமாக தோற்றதினால் தான் கடுப்பாகி விட்டார்கள்..அட! தென் ஆப்ரிக்காவுடன் ஆறுதல் வெற்றி கூட பெறலைங்க.. என்னத்தை சொல்றது!
டோனிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, அவரது அதிரடி ஆட்டம் எல்லாம் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது, மொக்கை போட்டுக்கொண்டு உள்ளார். இந்த போட்டிகளில் டோனி சோபிக்கவே இல்லை. எனக்கு பெருத்த ஏமாற்றம், ஹிட்டரான இவரை போன்றவர்களை நம்பியே Twenty-20 போட்டிகள் உள்ளன.
இந்திய அணியின் பயிற்சியாளர், இந்திய அணி IPL போட்டிகளில் கலந்து கொண்டதாலே சோர்வடைந்து விட்டார்கள், இதனாலேயே நம் அணியின் வெற்றி பறி போய்விட்டது என்று குற்றம் சாட்டி உள்ளார், ஆனால் இதை டோனி மறுத்து பேசியுள்ளார். ஒரு அணி தோல்வி அடையும் போது இதை போல சர்ச்சைகள் வருவது சகஜமே. ஆனால் எனக்கும் IPL போன்ற போட்டிகளில் வீரர்கள் அதிகளவில் பணம் சம்பாதிப்பதால் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி குறைந்து விட்டதாகவே தோன்றுகிறது. கிரிக்கெட் என்பதை பணம் சம்பாதிக்கும் தொழிலாக இந்தியாவில் அறிவித்து!! விட்டதால் இனி என்னத்தை பேசி என்ன பயன்? ரசிகர்கள் வழக்கம் போல இதற்க்கு புலம்பி விட்டு அடுத்த போட்டியில் இந்திய அணி ஜெயிக்கும் போது சூப்பர்! சூப்பர்!! னு சொல்லிட்டு வழக்கம் போல பிழைப்பை! பார்க்க வேண்டியது தான்.
நம்ம நிலைமை ஆஸ்திரேலியாவை ஒப்பிடும் போதும் பரவாயில்லை :-) அவர்கள் கேவலமாக தோற்று விட்டார்கள், அதற்க்கு சைமண்ட்ஸ் இல்லாததே காரணம் என்று ஒரு சப்பை காரணம் கூறி இருக்கிறார்கள். மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் சிறப்பாக விளையாடின இருந்தாலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. இலங்கை அணி அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி விட்டு இறுதி போட்டியில் சொதப்பி விட்டார்கள். போட்டி நடத்தும் இங்கிலாந்து, மானம் காக்க கடுமையாக போராடியும் ஒன்றும் வேலைக்காகவில்லை.
ஆடவர் போட்டி பற்றி தானே பேசிட்டு இருக்கோம் பெண்களும் Twenty-20 போட்டியில் கலக்கி உள்ளனர், ஆமாங்க! நேற்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே நடந்த முதல் Twenty-20 உலககோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. போட்டியை நடத்தும் இங்கிலாந்தை ஆண்கள் அணி கை விட்டாலும் பெண்கள் அணி கோப்பை கைப்பற்றி நிம்மதி அடைய வைத்துள்ளது.
இங்கிலாந்து பெண்கள் அணிக்கு இந்த வருடம் அமர்க்களமான வருடம். இந்த வருடம் தான் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் (இதிலும் நியுசிலாந்துடன் இறுதி போட்டி) வெற்றி பெற்றார்கள், தற்போது Twenty-20 முதல் உலக கோப்பை போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறார்கள், அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com