Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

26 ஜூன் 2009

படித்ததில் பிடித்தது: தமிழகத்தை குறிவைக்கும பாலிவுட் கவர்ச்சி

கேரளாவில் ஷகிலா அலை ஓய்ந்த பிறகு காலைக்காட்சி படங்கள் கொஞ்சம்

கட்டுக்குள் இருந்தன. தமிழர்களும் நிம்மதியாக இருந்தார்கள். அந்த நிம்மதி நீடிக்காதுபோல் தெரிகிறது. அந்தளவுக்கு பயமுறுத்துகின்றன பாலிவுட்டிலிருந்து இறக்குமதியாகும் சில படங்கள். பிபாஷாபாசு, ஜான் ஆபிரஹாம் நடித்து சில ஆண்டுகளுக்கு முன் 'ஜிஸம்' என்ற படம் வெளியானது. ஒரு பெண்ணின் தவறான உறவை சித்தரிக்கும் 'ஜிஸம்' அன்றைய தேக்கநிலை இந்தி சினிமாவில் ஒரு அலையை கிளப்பியது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக்கொண்டிருந்த பாலிவுட், பாதை மாறியதற்கு துவக்கம் அமைத்துக்கொடுத்தது 'ஜிஸம்'. பிபாஷாபாசுவின் கவர்ச்சியை நம்பி வெளியான இப்படம் 'தேகம்' என்ற பெயரில் தமிழில் வெளியானது. 'ஜிஸம்' அமைத்துக்கொடுத்த ஒற்றையடி பாதையை ராஜபாட்டையாக மாற்றியது மல்லிகா ஷெராவத்தின் 'மர்டர்' படம். கவர்ச்சி இருந்தால் காசு பார்க்கலாம் என்ற கருத்தை பாலிவுட்டின் மூளையில் அழுத்தமாக பதித்தது, மல்லிகா நீச்சல் உடையில் தோன்றிய இப்படம். 'கல் கோ நா கோ', 'ரோடு', 'பிளாக்', 'ரங் தே பசந்தி' என ஒருபுறம் இந்தி சினிமா இறக்கை கட்டி பறக்க, மறுபுறம் கவர்ச்சி, காமம், தவறான உறவு இவற்றை மையப்படுத்தி பெருவாரியான படங்கள் தயாரிக்கப்பட்டன. இந்தி பேசும் மாநிலங்களை தாண்டி தமிழிலும் இப்படங்கள் வெளியாவது அதிர்ச்சியான நிகழ்வு. மலையாள ஆபாசபடங்களின் வரத்து தமிழகத்தில் ஏறக்குறைய நின்றுபோன நிலையில், அந்த இடத்தை பாலிவுட்டின் பலான படங்கள் நிரப்பியுள்ளன. தமிழில் 'காதல் கவிதை', 'என் சுவாசக்காற்றே' படங்களில் நடித்த இஷா கோபிகர், 'ஜே ஜே' நாயகி அமோகா போன்ற முன்னணி நடிகைகள் இதுபோன்ற கவர்ச்சி படங்களில் நடிக்க தயங்குவதில்லை என்பது இன்னொரு ஆச்சரியம்!
பெண்ணுடன் பெண் உறவு கொள்ளும் இஷா கோபிகரின் 'கேர்ள் பிரெண்ட்' படம், இந்தியாவின் முதல் லெஸ்பியன் படம் என்ற விளம்பரத்துடன் தமிழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று டஜன் திரைப்படங்கள் பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வர வரிசைகட்டி நிற்கின்றன. இவற்றின் உள்ளடக்கத்தை இப்படங்களின் பெயர்களே நமக்கு உணர்த்தி விடுகின்றன. '8-வது இரவு', 'உச்சக்கட்டம்', 'சிருங்காரி', 'சேத்னாவின் இரவுகள்'.... பலருடன் தவறான உறவு வைத்துக்கொள்வது, கணவனுக்கு துரோகம் இழைப்பது, விலைமாதுவின் இரவு வாழ்க்கை, பில்லிசூன்யம், நிர்வாணபூஜை...ஆகியவையே இப்படங்களின் கதை களங்கள். விரைவில் தமிழுக்கு வரவிருக்கும் '8-வது இரவு' படத்தில் நடித்திருப்பவர் மேக்னா நாயுடு. உலகின் மிகப்பெரிய இயற்கை சீற்றங்கள் எட்டாம் தேதியிலேயே நடந்திருக்கின்றன. இதனை மையப்படுத்தி வெளிவரும் படமே எட்டாவது இரவு. பில்லி சூன்யம் முக்கியமாக இடம்பெறும் இப்படத்தில் மேக்னா நாயடுவின் தோழியாக வரும் இரு பெண்கள் தோஷம் நீங்க நிர்வாண பூஜை செய்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. மேக்னா நாயுடுவின் தாராள கவர்ச்சி படத்துக்கு போனஸ். மேக்னாவுக்கு இப்படத்தில் ஜோடி ராஜாதாரா என்ற நடிகர். கரண் ராம்தான் இப்படத்தை இயக்கியுள்ளார். 'கேர்ள் பிரெண்ட்' ஜாதியில் இஷா கோபிகர் நடித்திருக்கும் புதிய படம் 'ஹசீனா'. இரண்டு ஆண்களை காதலித்து அதில் ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் கதை. நாயகன் வர்மாவுடன் இஷா நடித்திருக்கும் நெருக்கமான காதல் காட்சிகளுக்காகவே இப்படம் தமிழகத்துக்கு வருகிறது. தமிழில் 'ஹசீனா'வின் பெயர் 'உச்சக்கட்டம்'. ப்ரீத்தி ஜிங்கானி இதன் இயக்குனர்.
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகைகள் சோனாலி, பிந்து நடித்த இந்திபடம், 'சேத்னாவின் இரவுகள்' என்ற பெயரில் விரைவில் தமிழுக்கு வருகிறது. சேத்னாவின் இரவு வாழ்க்கை படத்தின் பிரதான கதை பகுதி! விநியோகஸ்தர்களும் தயாரிப்பாளர்களும் அதிகம் எதிர்பார்க்கும் இன்னொரு படம் 'சிங்காரி'. பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் நடித்தது. 'சிங்காரி'யை இயக்கியிருப்பவர் 'காமசூத்ரா'வை இயக்கிய கல்பனா ஜி. லஷ்மி என்பதால் இப்படத்திற்கு ஏக எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை எந்த வகையிலும் ஏமாற்றாத கதை, 'சிங்காரி'. நகர பரபரப்பிலிருந்து விலகி இருக்கும் கிராமம் ரவ்பூர். விலைமாதர்கள் நிறைந்த கிராமம். இங்கு பிரதான தொழிலே விபச்சாரம்தான். இங்கு, மனதுக்கு பிடிக்காமல் வேறுவழியின்றி விபச்சாரம் செய்து வருபவள் பசந்தி. நல்ல மனிதன் யாராவது அகப்பட்டால் அவனுக்கு மனைவியாகி விபச்சாரத்தை விட்டொழித்து வாழ ஆசைப்படுகிறாள் பசந்தி. ஆனால், அப்படியொரு ஆணுக்கு ரவ்பூரில் கடுமையான தட்டுப்பாடு.
இந்நிலையில் பசந்தியை சந்திக்கிறான் கந்தன் மிஸ்ரா. பசந்தியின் கனவு நாயகனின் குணங்கள் கந்தன் மிஸ்ராவிடம் கச்சிதமாக பொருந்துகிறது. கந்தன் மிஸ்ராவும் பசந்தியின் அழகில் மயங்குகிறான். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். வாழ்க்கை சுபத்தில் சென்று கொண்டிருக்க விபத்தாக வருகிறது பவன் புண்டாவின் வரவு. ரவ்பூர் கிராமத்தை கடவுளின் பெயரை சொல்லி அடிமைப்படுத்தியிருக்கும் நவீன பண்ணையார் (சாமியார்?) இந்த பவன் புண்டா. இவனுக்கு பசந்தி மீது அளவுகடந்த காமம். புண்டாவின் ஆன்மீக செல்வாக்கு சிரமமில்லாமல் பசந்தியை படுக்கையில் வீழ்த்தி விடுகிறது. அவனிடமிருந்து தப்பித்து கந்தன் மிஸ்ராவுடன் ஒன்றுசேர போராடுகிறாள் பசந்தி. அவளது போராட்டம் நிறைவேறியதா இல்லையா என்பது க்ளைமாக்ஸ். கவர்ச்சியில் தோயத்து எடுத்த இந்த கதையில் பசந்தியாக பாரபட்சமில்லாத கவர்ச்சியை வாரி வழங்கியிருக்கிறார் சுஷ்மிதா சென். கந்தன் மிஸ்ராவாக அனுக் சவானியும், பவன் புண்டா பாத்திரத்தில் மிதுன் சக்ரவர்த்தியும் நடித்துள்ளனர். 'சிங்காரி' போன்ற ஒருடஜன் படங்கள் தமிழில் வெளியாக காத்திருக்கின்றன. மாளவிகா இந்தியில் நடித்த 'சீ யூ அட் 9' திரைப்படம் சென்னை தியேட்டர் ஒன்றில் 150 நாள்கள் ஓடியதை தொடர்ந்து இதுபோன்ற படங்களுக்கு மார்க்கெட் கிராஃப் ஏறுமுகத்தில் இருக்கிறது. கற்பு குறித்தும் கலாச்சாரம் குறித்தும் படங்களின் பெயர் குறித்தும் கூச்சலிடும்
அமைப்புகள் இந்த பாலிவுட் பாய்ஸனை கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியத்தைவிட அதிர்ச்சியை அளிக்கிறது. ஒருவகையில் மலையாள காலைக்காட்சி படங்களைவிட இவை அபாயகரமானவை. மலையாளப் படங்களை பார்க்க செல்லும் பார்வையாளர்கள், தவறான ஒன்றில் ஈடுபடும் குற்றவுணர்வுடன் முடிந்த அளவு தங்களை மறைத்துக்கொண்டே தியேட்டருக்குள் நுழைகிறார்கள். மேக்னா நாயுடு, இஷா கோபிகர், சுஷ்மிதா சென் போன்ற முன்னணி நடிகைகள் நடித்திருப்பதால் பாலிவுட் படங்கள் பார்வையாளர்களுக்கு எவ்வித குற்றவுணர்வையும் ஏற்படுத்துவதில்லை. சாதாரண பார்வையாளர்களின் மனநிலையுடனேயே இவர்கள் டிக்கெட் வாங்குகிறார்கள். திருட்டை அது திருட்டு எனும் குற்றவுணர்வு இல்லாமல் செய்யும் அபாயகரமான மனநிலை இது. இந்த அழிவுப்பாதைக்கு முடிவு கட்டுவது யார்? தமிழ் கலாச்சார உலகின் மிகப்பெரிய கேள்வி இது!
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com