கொடுக்கப்பட்ட விருதுகளை விமர்சித்திருப்பன்யா!! பின்னூட்டம் போட்டுக் கொல்லலாம் என்று வந்தீர்களா.... ஏமாந்த காக்கா ஏமாந்த காக்கா... நான் சொல்லப் போறது என்னான்னா.. இந்த நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி வந்தாங்கோ!!... மேடையில என்னென்ன ஃபிலிம் காட்டினாங்கோ!! என்னெல்லாம் நல்லாருந்திச்சு! என்னெல்லாம் கடுப்பைக் கிளப்பிச்சு என்று சும்மாங்காட்டியும் ஒரு பதிவைப் போட்டுப் பார்ப்பமே என்றுதான் இந்தப் பதிவு.
உடையலங்காரம்
நம்மவர்கள் கொஞ்சம் இதுல வீக். எங்க எப்பிடி உடை உடுத்துவது என்ற வரையறை பெரும்பாலும் இவர்களுக்கு இருப்பது இல்லை. சிலபேர் ஏதோ வெளிநாட்டில் நடக்கும் விருது விழாவுக்கு வருவது போலவும், சிலபேர் எதோ பக்கத்து வீட்டு நிகழ்ச்சிக்கு வருவது போலவும், சிலபேர் (சில பேர் என்ன சில பேர், இரண்டே இரண்டு பேர்) டிஸ்கொத்தேக்கு வருவது போலவும் வந்திருந்தார்கள். கமல் வழமை போலவே இளமையாய் வந்தார். உடையிலும் பெரிதாக குறை சொல்ல முடியாது. ஆனால் அவர்கூட வந்த அந்த 4 வேற்றுக் கிரகவாசிகள்தான் யாரென்று தெரியவில்லை. தனுஷ் போன வருடம் போட்ட அதெ உடையோடு வந்த மாதிரி இருந்தது. நயன்தாரா உடுக்கணுமே என்று உடை உடுத்தி வந்திருந்தார். தமன்னா ஓ.கே ரகம். நம்ம இளைய தலைவலிகூட ஏனோ தானோ என்று வந்திருந்தார். முருகதாஸ், பார்த்திபன் எல்லோரும் அவ்வாறே. மனோரமாவும், பூர்ணிமாவும் சேலையில் வந்திருந்தார்கள். சங்கீதா, சினேகா looked O.K. தாய்மை பெண்களின் அழகைக் கூட்டும் என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அதற்கு சமீபத்திய உதாரணமாக வந்திருந்தார் ‘ஜோ'. 'ஜோ' வுக்கே ஜோதி போல் அழகாக வந்திருந்தார் சூர்யா. கார்த்தி உடைத்தெரிவில் அண்ணனிடமும் அண்ணியிடமும் நிறையக் கற்கவேண்டும். பழைய முகங்கள் பாலசந்தர், சிவகுமார் போன்றோர் சட்டை போட்டு இன் பண்ணி வந்திருந்தார்கள். பிரசன்னாவின் நிறத்தேர்வு உவ்வே. ஜெய், அஜ்மல் பரவாயில்லை. மிஷ்கினுக்கு பிறந்ததிலிருந்தே 'மெட்ராஸ் ஐ' போல. அந்தக் கண்ணாடியைக் கழட்டுங்க பாஸூ.
கண்ணுக்கு அழகு
சூர்யா- ஜோதிகா ஜோடி. (வெள்ளாடை தேவதையும் கொள்ளை கொண்ட கந்தர்வனும்), கமல், பரத். விருது நிகழ்ச்சிக்கு முன் சிகப்பு கம்பள வரவெற்புக் கொடுத்த திவ்யதர்ஷிணி. (அவங்க பேசின தமிழைச் சொல்லலீங்கோ)
கண்ணுக்குக் கடுப்பு
கௌதமி, கமல் மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா, கௌதமி மகள் சுப்புலட்சுமி. (இதுல கௌதமிக்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளர்னு விருது வேற). வெங்கட் பிரபு- பிரேம்ஜி அமரன் சகோதரர்களின் Slogan எழுதிய T-Shirts. அதிலும் I think he is a Gay என்ற வாசகம் பொறித்த சட்டையோடு வந்த பிரேம்ஜி கடுப்புகளைக் கிளப்பினார். நீங்க எடுக்கிற படம் ஜாலியா இருக்கலாம் வெங்கட். ஆனா எங்க எப்படி நடக்கணும்னு சிலது இருக்கு. ஓவர் ஃபிலிம் உடம்புக்காகாது பாஸூ.
மேலும் படங்கள் பார்க்க இங்கே கிளிக்குங்கள்.
நல்லாருந்தது
- போன வருடத்தின் சிறந்த Entertainer விருது பெற்ற தனுஷின் பேச்சு, நாகேஷ், ஆர். சி. சக்தி, அனந்து பற்றிய கமலின் பேச்சு, 'அஞ்சாதே' படத்தில் குருவியாக நடித்த 'பாம்' ரமேஷின் எளிமையும் அப்பாவித்தனமும் கலந்த பேச்சு.
- மேடையின் பின்புறத்திலிருந்த பெரிய திரை.
- தன் வழமையான உற்சாகதோடு தேவா, லெஸ்லி சகிதம் ஹரிஹரன் பாடிய 'மோதி விளையாடு' பாடல்.
- ருக்மணி டான்ஸ்.
- 'சத்யம் சினிமாஸ்'சுக்கு கொடுக்கப்பட்ட கௌரவம். (இவங்கதான் சினிமா நல்லா ஓட தியேட்டர் தேவைன்னு முதன் முதலாகக் கண்டு பிடிச்சிருக்காங்க)
- ஹாரிஸ் ஜெயராஜ்- கௌதம் மேனன் காட்சிகள். மற்றும் ஹாரிஸின் சிம்பிளான பேச்சு. அவர் ஜேம்ஸ் வசந்தனின் ‘கண்கள் இரண்டால்' பற்றி சொன்ன வரிகள்
- கோபிநாத். கோபி.. நீங்க 'நீயா நானா ' நிகழ்ச்சி பண்ணலை. பள்ளிக்கூடப் பசங்களை வாத்தியார் கேள்வி கேட்பது போல் அதட்டிக் கேள்விகேட்கிறார் இல்லை புகழ்கிறேன் பேர்வழி என்று வழிந்துக கொண்டே................ இருக்கிறார். இவருக்கு யூகி சேது எவ்வளவோ தேவலை. (அந்த Best Wishes, வாஆஆஆஆஅவ், கூ.........ல் மூணையும் விட்டு வெளிய வாங்க கோபி. அப்புறம் உங்ககிட்ட கொஞ்சம் சரக்கிருக்கு என்று எங்களுக்கு தெரியும். அதுக்காக அதிமேதாவித்தனமான கேள்விகள் எல்லாம் ஒரு விருது மேடையில் ஓவர். ஹாரிஸ்-கௌதம் எபிசோடில் ரொம்ப எல்லை மீறிட்டார்.
- கமலைப் புகழ்கிறோம் பேர்வழி என்று எல்லாரும் புகழ்ந்து கொண்டே........ இருந்தார்கள். திகட்டுகிறது.
- அப்புறம் கமல், சூர்யா, சிவகுமார் குடும்பம், பாலசந்தர், மனோரமா சம்பந்தப் பட்ட தருணங்கள் எல்லாம் ஏதோ விக்ரமன் படம் பார்க்கும் உணர்வு. விருது மேடையை நட்சத்திரங்கள் நாடக மேடையாகக் கற்பனை பண்ணிவிட்டார்கள் போல். ஒரே கண்ணீர் மயம்... அடப் போங்கப்பா.
- 'செவாலியேர் சிவாஜி' விருதை வாங்க ரஹ்மான் வராதது.
- டான்ஸில நம்ம அடிச்சுக்க முடியாது என்று சொன்னார் கோபி. ஆனா கிட்டத்தட்ட எல்லா டான்ஸுமே சுமார்தான். அதுவும் அந்த தோனிய வச்சுப் பேர் பாத்திச்சே ஒரு பொண்ணு... அத இனிமே ஆடக்கூடக் கூப்பிடாதீங்க ஆமா.