Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

25 ஜூன் 2009

ஐஸ்வர்யா ராய் மீது வழக்கு!

சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் காற்றாலைக்கு பழங்குடியினர் நிலத்தை சட்டவிரோதமாக வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் நடிகை ஐஸ்வர்யாராய் மீது மகாராஷ்ட்ர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரபல காற்றாலை நிறுவனமான சுஸ்லான் எனர்ஜி மகாராஷ்ட்ராவின் நந்தர்பார் மற்றும் துல் மாவட்டங்களில் காற்றாலைகள் அமைக்க ஏராளமான நிலங்களை வாங்கியது. பழங்குடி மக்களுக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. அப்படி வாங்கப்பட்ட இந்த நிலங்களில் காற்றாலைகள் அமைக்க அரசின் சலுகைகளைப் பெற்றுக் கொண்ட சுஸ்லான், பின்னர் காற்றாலை அமைக்காமல், நிலங்களை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்களுக்கு எக்கச்சக்க விலைக்கு விற்று லாபம் பார்த்ததாக கூறப்படுகிறது. எனவே பழங்குடி மக்களை ஏமாற்றி மோசடி செய்து இந்த நிலங்கள் வாங்கப்பட்டிருப்பதாக மகாராஷ்ட்ர அரசு கடந்த முறை சட்ட சபையிலேயே அறிவித்தது நினைவிருக்கலாம். நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன், ட்விங்கிள் கன்னா மற்றும் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர் சிங் ஆகியோர் பெயர்களில் இந்த நிலங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மகாராஷ்ட்ர அரசே எழுப்பியுள்ள இந்தப் புகாரின் அடிப்படையில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் மற்றும் அமிதாப் பச்சன்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரும் இந்த நிலங்களை வாங்கியிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என அவர் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com