Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

21 ஜூன் 2009

3வது முறையாக நடிகர் சங்கத் தலைவரானார் சரத்குமார்

திரையுலகின் பலமான அமைப்புகளில் ஒன்றான நடிகர் சங்கத்தின் தலைவராக மூன்றாம் முறை தேர்வாகியுள்ளார் நடிகர் சரத்குமார். அவர் மட்டுமல்ல, அவருடன் சேர்ந்து அனைத்து நிர்வாகிகளுமே போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதனால் ஜூலை 12-ம் தேதி நடக்கவிருந்த தேர்தலுக்கு அவசியமில்லாமல் போனது. நேற்று மாலை இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரியான பிரறைசூடன். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். 2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரைக்கான தேர்தல், ஜுலை 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 1952-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 25-வது தேர்தல் இது. இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு சரத்குமார், துணைத் தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், மனோரமா, பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி, பொருளாளர் பதவிக்கு வாகை சந்திரசேகர் ஆகியோர் மீண்டும் போட்டியிடுவதற்காக, வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள். ஆனால் இவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், சரத்குமார் [^] உள்பட அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியாக இருந்த பிறைசூடன் அறிவித்தார். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு சத்யராஜ், முரளி, சார்லி, மும்தாஜ் உள்பட 24 பேர் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இவர்களுடன் வைத்யநாதன் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனு தேர்தல் [^] விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லாததால், தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி பிறைசூடன் அறிவித்தார். அதைத்தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்கள் 24 பேர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 57 ஆண்டுகளில் தலைவர் உள்பட 29 பேர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல்முறை என்று பொதுச் செயலாளர் ராதாரவி தெரிவித்தார். புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா, ஜுலை 12-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. சரத் பேட்டி பின்னர் நிருபர்களுக்கு சரத் குமார் அளித்த பேட்டி: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படாத புதிய கட்டிடம் இந்த 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். ஏறக்குறைய ஒரு லட்சம் சதுர அடியில் புதிய கட்டிடம், குளிர்சாதன வசதியுடன் அமையும். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 29 பேரும் முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற இருக்கிறோம். அப்போது புதிய இடத்தில், சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைப்போம் என்றார். இந்த முறையாவது நடிகர் திலகத்திற்கு மணிமண்டபம் அமைத்து கெளரவம் தேட முயலட்டும் நடிகர் சங்கம்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com