Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

21 ஜூன் 2009

மே. இந்தியத் தீவுகளை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது இலங்கை

லண்டன்: டுவென்டி 20 உலகக் கோப்பைத் தொடரின் 2வது அரை இறுதிப் போட்டியில் இலங்கை சிறப்பான வெற்றியைப் பதிவு செய்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை டுவென்டி 20 சாம்பியன் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. முதல் அரை இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் நேற்று 2வது அரை இறுதிப் போட்டி நடந்தது. இதில், இலங்கையும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதின. மிகச் சிறப்பாக ஆடிய இலங்கை அணி பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியை மிரட்டி விட்டது. இதன் மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணியின் திலகரத்னே தில்ஷான் அதிரடியாக ஆடி 96 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இடையில் சில விக்கெட்கள் மடமடவென்று சரிந்தபோதும் கூட தில்ஷான் நங்கூரமிட்டது போல நின்று விட்டதால் அணியின் ரன் குவிப்பு பாதிக்கப்படவில்லை. இறுதியில், 5 விக்கெட்களை இழந்து 158 ரன்களை எடுத்தது இலங்கை. இதையடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆட வந்தது. ஆனால் சந்தித்த முதல் ஓவரிலேயே 3 விக்கெட்களை அடுத்தடுத்து பறி கொடுத்து அதிர்ச்சிக்குள்ளானது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இலங்கை பந்து வீச்சாளர் ஏஞ்செலோ மாத்யூஸ் முதல் ஓவரிலேயே முத்திரை பதித்தார். சேவியர் மார்ஷல், லென்டில் சிம்மன்ஸ், பிரேவோ ஆகியோர் ஒவ்வொரு பந்து வித்தியாசத்தில் வீழ்ந்ததால், மேற்கு இந்தியத் தீவுகள் நிலை குலைந்தது. அதன் பின்னர் அந்த அணி எழுந்திருக்கவே இல்லை. கேப்டன் கெய்ல் நிலைமையைப் புரிந்து அதிரடியாக ஆடினார். ஆனால் அவருக்குத் துணையாக ஒரு வீரரும் நிலைக்கவில்லை. கெய்ல் 50 பந்துளில் 63 ரன்களைக் குவித்தார். தனி ஒருவராக கிணறு தோண்டியதால் மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் கரை சேர முடியாமல், 17.4 ஓவர்களிலேயே 101 ரன்களுடன் சுருண்டு போனது அந்த அணி. மாத்யூஸ் 3 விக்கெட்களையும், முரளீதரன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இறுதிப் போட்டியில் பாக்.குடன் மோதல் [^].. இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள இலங்கை, நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை சந்திக்கிறது. முதலாவது உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானும், இந்தியாவும் மோதின. இந்த முறையும் இரு ஆசிய அணிகளே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com