கூகிள் ப்ளஸ் வந்தவுடன் பதிவர்கள் அனைவருக்கும் ஏற்பட்ட எதிர்பார்ப்பு, "பேஸ்புக் பட்டன், ட்விட்டர் பட்டன்" போன்று கூகிள் ப்ளஸ்ஸில் பதிவுகளை பகிரும் வசதி என்று வரும்? என்பது தான். தற்போது அந்த வசதியை கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது. ப்ளஸ் ஒன் பட்டனே ஷேர் பட்டனாகவும் வேலை செய்கிறது. இதன் மூலம் நாமும், நமது நண்பர்களும் கூகிள் ப்ளஸ்ஸில் நமது பதிவுகளை எளிதாக பகிரலாம்.
மேலும் நாம் படிக்கும் பதிவை நமது நண்பர்கள் பகிர்ந்திருந்தால் அவர்களின் புகைப்படங்களும் காட்டும். ஆனால் இந்த வசதி சில நபருக்கு மட்டும் தான் என நினைக்கிறேன். எனக்கு இன்னும் இந்த வசதி வரவில்லை.
"அடுத்த பதிவு ரெடி" என்று அந்த பக்கத்திற்கு போனால், ஒரே குழப்பம். கூகிள், மைக்ரோசாஃப்ட், யாஹூ இவையெல்லாம் இணைந்து ஏதோ Schema.org என்று ஏதோ கொண்டுவந்திருக்கிறதாம். அதன் நிரலையும் சேர்க்க வேண்டும் என சொன்னது. அதை பற்றி தெரிந்துக் கொள்ளப்போனால் இன்னும் குழப்பம். அப்புறம் ஒருவழியாக அந்த Code-ஐ வேறு மாதிரியாக கொடுக்கலாம் என்று, அந்த Code-ஐ மாற்றி அமைத்து முயற்சித்தேன். சரியாக வந்தது.
பிறகு எதேச்சையாக இன்னொரு தளத்திற்கு சென்று பார்த்தால், பழைய Code-களிலும் இது நன்றாக வேலை செய்கிறது. செம டென்ஷன்...!
நான் ஏன் குழம்பினேன் என்று அறிய: http://www.google.com/webmasters/+1/button/
சரி விசயத்துக்கு வருவோம்.
கூகிள் ப்ளஸ்ஸில் பகிர்வது எப்படி?
பதிவுகளை ப்ளஸ் ஒன் பட்டனில் ப்ளஸ் செய்தவுடன், நீங்கள் ப்ளஸ் செய்த தகவலும், அதன் கீழே Share On Google+ என்று வரும். கூகிள் ப்ளஸ்ஸில் எப்படி பகிர்வோமோ அது போல பகிர வேண்டியது தான். இன்னொன்று, நீங்கள் ப்ளஸ் ஒன் செய்தால் தான் பகிர முடியும்.
இந்த ஒரு பத்தியை எழுதுவதற்கு கூகிள் என்னை ஒருமணி நேரம் டென்ஷன் படுத்திவிட்டது.
இதுவரை கூகிள் ப்ளஸ் ஒன் பட்டனை நிறுவாதவர்கள் பின்வரும் Code-ஐ, எந்த இடத்தில் பட்டனை வைக்க வேண்டுமோ அதற்கு ஏற்றவாறு Edit Html பகுதிக்கு சென்று Paste செய்யவும்.