தனது நிஜ வாழ்க்கையில் சினிமா உலகம் கொடுத்த நண்பர்களுடன் சேர்ந்து சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்த இயக்குநர் சரண் பின்னாளில் அந்த நண்பர்களாலேயே ஏமாற்றப்பட்டு பின்பு தனித்து விடப்பட்டு கஷ்டப்பட்ட கால கட்டங்களில் கூடவே இருந்த இரண்டு குரு பக்தியுள்ள உதவி இயக்குனர்களை வைத்துக் கொண்டு இயக்கி வெளிவந்திருக்கும் படம்.
படத்தோட கதையையும், வசனங்களையும் நம்ம பதிவுலகத்துல தொடர்ந்து எழுதிக்கிட்டு வர்ற மரியாதைக்குரிய எழுத்தாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியிருக்கிறார்.
ஒரே மாதிரி மசாலாப் படங்களை பாத்து பாத்து புளித்துப்போன நம்ம கண்களுக்கு இந்த படம் உண்மையிலேயே கோடை வெயிலுக்கு இதமா கிடைக்கிற ஐஸ்க்ரீம் மாதிரி.
அதே மாதிரி இந்த படத்தோட கதையும் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லாதது.நன்றி: ராமகிருஷ்ணன சார்)
உலக பணக்காரர்கள்ல ஒருத்தர் தான் கலாபவன்மணி,அவரோட வேலையே ரொம்ப நஷ்டத்துல இருக்குற ஒவ்வொருத்தோட கம்பெனிகளையும் அடிமாட்டு ரேட்டுக்கு வாங்கி லாபம் சம்பாதிக்கிறது.
இது எதிர்பார்ட்டிகளுக்கு கடுப்ப கிளப்புது.அப்படி கம்பெனியை இழந்து அதனால தன்னோட மகனையும் இழந்து பாதிக்கப்பட்ட ஒருத்தர் கலாபவன்மணி பையனான வினய்யை காலிபண்ண பாக்குறாரு..,
எப்பவுமே தன்னோட நண்பர்கள் சந்தானம்,யுவா(புதுமுகம்) இவங்களோட சேர்ந்து அப்பா கொடுத்த முழு security பாதுகாப்போட சுத்துற கலாபவன்மணியோட பையன் வினய்யை சுட்டுக் கொள்ள முயற்சி பண்ற எதிரி கூட்டம் தவறுதலா அவனோட நண்பர் யுவாவை சுட்டு கொன்னுடுறாங்க.
ஆனா மறுநாள் வினய்க்கிட்டேயிருந்து பாதுகாப்பு,பணவசதி,வேலையாட்கள் இப்படி எல்லா வசதிகளும் பறிக்கப்படுது, ஏன்? அப்போ கலாபவன்மணியோட உண்மையான பையன் யாரு..? யுவாதான் அவரோட பையன்னா எதுக்கு வினய்யை உலகத்துக்கு தன்னோட பையனா காட்டனும்? இப்படி பல கேள்விகளுக்கு விடை சொல்லுது படம்.
ஹீரோ வினய், "உன்னாலே உன்னாலே" படத்துக்கு பின்னால ரொம்பவே தேறிட்டாரு,பாக்குறதுக்கு அமுல்பேபி மாதிரி இருந்தாலும் ஆளு சும்மா ஹன்ட்சமா இருக்காரு.
"பழனி" படத்துக்கு பின்னாடி காஜல் அகர்வால் நடிப்புல மட்டுமில்ல அழகுலேயும் கிறங்க வைக்கிறாங்க.சும்மா பாத்துகிட்டே இருக்கலாம் அவ்ளோ அழகு, (இப்படி பாத்துகிட்டே இருந்தா..ன்னு யாரோ சொல்றது எனக்கு கேக்குது)
பெரும்பாலான படங்கள்ல மிமிக்ரி பண்ற கலாபவன் மணி இந்த படத்துல அத குறச்சிருக்கார்.(தேங்க்ஸ்...மணி)
பிளைட்லவர்றது,பிளைட்லபோறது,ஷாப்பிங்மால்ஸ்,சத்யம்சினிமாஸ்,
துபாய்,சென்னையில் இருக்குற பணக்கார ஏரியாவான 'அடையார் போட்கிளப்' இப்படி படம் முழுக்க பணக்காரத்தனம்.புதியவர் கருணோட ஒளிப்பதிவு அப்பப்பா அப்டியே கண்ல ஒத்திக்கலாம்.படம் முழுக்க போரடிக்காத ஒரு புது ஸ்டைலிஷ்.
இப்போ இருக்குற தொழில்நுட்பத்தின் பெரும்பாலான பரிமாணங்களை இந்த படத்துல கொட்டி குடுத்துருக்கார் இயக்குனர் சரண், சரண் இதுவரைக்கும் இப்படி ஒரு படம் பண்ணினதே இல்ல.(ஆல் த பெஸ்ட் சரண்.)
லக்ஷ்மன் பின்னணி இசை ஒரு ஆங்கிலப் படத்துக்கு நிகரா இருக்கு,ஹரிகரன்&லெஸ்லி யோட மியூசிக்ல வெள்ளைக்காரி, லட்சம் வார்த்தைகள், மோதி விளையாடு இப்படி எல்லா பாட்டுமே போரடிக்காத பாட்டுகள் தான்.
காட்டு கத்தல்,காத கிழிக்கிற சவுண்ட்,ஒரே ரத்த வாடைநீளமான வசனங்கள் இப்படி எந்த கடுப்பையும் கிளப்பாம நம்மள ஒரு புது உலகத்துக்கு கூட்டிட்டு போற படம்