
சிடி மற்றும் டிவிடிக்களைத் தயாரிக்க அதற்கான சாப்ட்வேர் அப்ளிகேஷன்களைத் தேடுகிறீர்களா? அதுவும் இலவசமாக! மேலும் கூடுதல் வசதிகளாக புளு ரே மற்றும் எச்.டி–டிவிடிக்களையும் தயாரிக்கும் வசதி கொண்டதாகத் தேடுகிறீர்களா! ஆஹா! இத்தனையும் இலவசமா என்று வியப்படையாதீர்கள். சிடி பர்னர் எக்ஸ்பி என்ற புரோகிராம் இதைத்தான் செய்கிறது. உங்கள் சிஸ்டம் ஒத்துழைத்தா புளு ரே மற்றும் எச்.டி –டிவிடிக்களையும் தயாரித்து வழங்குகிறது.இதன் லேட்டஸ்ட் பதிப்பு (4.2.4) ஆக கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து நேரடியாக உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தி டலாம். மற்ற சிடி பர்னர்களைக் காட்டிலும் இது நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் எந்தவிதமான விளம்பர புரோகிராம்கள் அல்லது கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களோ இணைந்து வருவதில்லை.

கம்ப்யூட்டரில் இதனை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன் தொடக்க திரையில் ஐந்து பட்டன்கள் உள்ளன. அவை Data Disc, Audi Disc, Burn ISO image, Copy Disc and Erase Disc. ஆகியனவற்றினைத் தேர்ந்தெடுக்கத் தரப்பட்டிருக்கும் இன்டர்பேஸ் ஆகும். இதில் எது உங்கள் வேலைக்குச் சரியான பட்டனோ அதனைக் கிளிக் செய்திடவும். எடுத்துக் காட்டாக நீங்கள் டேட்டா பைல்களைக் கொண்டு சிடி உருவாக்கப் போகிறீர்கள் என்றால் இதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடன் கிடைக்கும் விண்டோவில் மேலும் இரு பட்டன்கள் உள்ள ஆப்ஷன் திரை கிடைக்கும். பின் அதன் வழியே சென்றால் எளிதாக சிடி பர்ன் செய்யலாம்.
இந்த புரோகிராமினை விண் டோஸ் 2000 ல் தொடங்கி இன்றைய விஸ் டா ஆப்ப ரேட்டிங் சிஸ்டங்கள் வரையில் இயக்கலாம். இதனை இன்ஸ்டால் செய்திடும் முன் உங்கள் சிஸ்டத்தில்
.net framework இருப்பதனை உறுதி செய்திடுங்கள். இது இல்லை என்றால் இந்த புரோகிராம் சரியாகச் செயல்படுவதில்லை.தரவிறக்கம் செய்ய :
இங்கே கிளிக் செய்யவும்