முன்னணி செல்பேசி நிறுவனமான நோக்கியா லேப்டாப் தயாரிப்பில் ஈடுபடப்போவதாக சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன. நோக்கியா நிறுவனம் இன்று தனது சிறிய லேப்டாப்பை(Nokia Booklet 3G)அறிமுகப்படுத்தியது.10.1 இன்ச் அகல அதி துல்லிய(High Defninition) திரையுடன் வரும் இந்த லேப்டாப் 1.25 கிலோ எடை மட்டுமே கொண்டது.3G வயர்லெஸ் வசதி கொண்ட இந்த லேப்டாப் விண்டோஸ் இயங்குதளத்தை கொண்டிருக்கும்.HDMI வெளியீடு(அதிதுல்லிய தொலைக்காட்சி பெட்டியுடன் இணைக்க),உள்ளிணைந்த A-GPS(இருப்பிடங்களை அறிந்து கொள்ள)வசதிகளையும் கொண்ட இந்த லேப்டாப்பின் முக்கிய சிறப்பம்சம் 12 மணி நேரம் உபயோகிக்கும் அளவுக்கு ஆற்றல் தரும் இதன் பேட்டரி தான். இந்த லேப்டாப்பின் விலை மற்றும் மேலதிக விவரங்களை நோக்கியா நிறுவனம் செப்டம்பர் 2 ஆம் தேதி ஜெர்மனியில் நடைபெறும் Nokia World 2009 என்னும் கருத்தரங்கில் வெளியிடப்போகிறது.