Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

08 ஜூன் 2012

யூரோ கால்பந்தில் வெற்றியுடன் துவக்குமா போலந்து! * இன்று கிரீஸ் அணியுடன் மோதல் *


கால்பந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த யூரோ கோப்பை தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் போலந்து, கிரீஸ் அணிகள் மோதுகின்றன. சொந்தமண்ணில் களமிறங்கும் போலந்து வெற்றி பெறும் நோக்கத்தில் உள்ளது.
ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு சார்பிலான, யூரோ கோப்பை கால்பந்து தொடர் இன்று துவங்குகிறது. 16 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் போட்டியில், "ஏ' பிரிவில் போட்டியை நடத்தும் போலந்து, கிரீஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008 தொடரில் முதன் முதலாக யூரோ போட்டியில் பங்கேற்ற போலந்து அணி, 2ல் தோற்று ஒரு போட்டியில் "டிரா' செய்து வெளியேறியது. இம்முறை சொந்த மண் என்பதால் வெற்றியுடன் துவக்க முயற்சிக்கலாம். இதற்கு தகுந்து இந்த அணி கடைசியாக பங்கேற்ற 5 போட்டிகளில் 4ல் வெற்றி, ஒரு "டிரா' செய்த நம்பிக்கையில் உள்ளது. கிரீஸ் அணிக்கு எதிராக பங்கேற்ற "நட்பு' போட்டியிலும், போலந்து தான் ஆதிக்கம் செலுத்தியது.
இருப்பினும், 2009ல் நடந்த உலக கோப்பை தகுதி சுற்றில் சொதப்பியதால், போலந்து அணி எவ்வித தொடர்களிலும் பங்கேற்காதது பின்னடைவு தான். கேப்டன் ஜாக்கப் பிளாஸ்சிகவுஸ்கி, ராபர்ட், லுகாஸ், சீஸ்னி ஆகியோர் தெளிவான திட்டத்துடன் களமிறங்கினால், முதல் வெற்றி பெறலாம்.
கிரீஸ் எப்படி:
கடந்த 2004ல் யூரோ கோப்பை வென்று அதிர்ச்சியளித்த கிரீஸ் அணி, இதன் பின் பெரிய அளவிலான தொடர்கள் எதிலும் பிரகாசிக்கவில்லை. 2008 யூரோ, 2010 உலக கோப்பை தொடர்களில் பங்கேற்ற 6 போட்டியில் 5ல் தோற்று, லீக் சுற்றுடன் வெளியேறியது. இம்முறை நம்பிக்கையுடன் களமிறங்கும் கிரீசிற்கு 16 மாதங்களுக்குப் பின் அணிக்கு திரும்பிய ஏஞ்சலோஸ் சாரிஸ்டீஸ், கரகவுனிஸ், கட்சவுரனிஸ் போன்ற சீனியர்கள் உதவலாம்.
ரஷ்யா மோதல்:
இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் ரஷ்யா, செக் குடியரசு அணிகள் மோதுகின்றன.
வெற்றி ஆதிக்கம்
போலந்து, கிரீஸ் அணிகள் இதுவரை 15 முறை மோதியுள்ளன. இதில் போலந்து அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. 2 போட்டிகளை "டிரா' செய்த இந்த அணி, 3ல் மட்டும் தோற்றது.
* கடைசியாக மோதிய 8 போட்டிகளிலும், கிரீஸ் தோற்றுள்ளது. இதில் நான்கு கோல்கள் மட்டுமே அடித்த இந்த அணி, போலந்திடம் 22 கோல்கள் வாங்கியுள்ளது.
யானை கணிப்பு பலிக்குமா
கடந்த உலக கோப்பை தொடரில் போட்டி முடிவுகளை சரியாக கணித்தது "பால்' ஆக்டோபஸ். இப்போது யூரோ கோப்பை போட்டிகளை கணிக்கிறது இந்திய யானை "சிட்டா'.
 தற்போது போலந்தின் மிருக காட்சி சாலையில் "சிட்டா' குறித்து பாதுகாவலர் ஜெர்சி பிரோக் கூறியது:
யானை "சிட்டா' கூறும் முடிவுகள் 100 சதவீதம் சரியாக உள்ளது. சமீபத்திய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து பைனலில் கோப்பை வென்ற அணியை, முன்னதாகவே கணித்தது. இப்போது, போலந்து அணி பங்கேற்கும் போட்டிகளின் முடிவை கணிக்கிறது. இதன் படி, இன்றைய முதல் போட்டியில் போலந்து தான் வெற்றி பெறுமாம்.
அதாவது, இந்த யானை முன், போலந்து, கிரீஸ் தேசிய கொடிகளுடன், மற்றொரு கொடியையும் ("டிரா') வைத்து, ஒவ்வொன்றின் முன்னால், பழத்தை வைத்தனர். போலந்து கொடியின் முன் உள்ள பழத்தை எடுத்து, போலந்து வெற்றியை குறித்தது. இது சரியா என்று, இன்று தெரியும்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com