அரைவாசி மண்டையோட்டுடன் பிறந்த 2 வயதுக் குழந்தை அழுதால் இறந்துவிடக்கூடும். அடம்ஸ்-ஒலிவர் அறிகுறி என்ற 130 பேரில் ஒருவருக்கு ஏற்படும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளாள் இச்சிறுமி.
இவளது மண்டையோட்டில் 7 செ.மீ. இல் 6 செ.மீ. பகுதி இல்லை. இவளது மூளையானது திரவத்தினாலும் அதனைச் சுற்றிலும் மெல்லிய தோற்படையினாலும் மட்டுமே சுற்றப்பட்டுள்ளது.
இதனால் அக்குழந்தையை அழவிடாது வைக்கும்படி வைத்தியர்கள் அதன் பெற்றோரிடம் கூறியுள்ளனர். அவள் எப்போதுமே ஒரு தலைக்கவசத்தினை அணிந்தபடியே இருக்கின்றாள். ஏனைய பிள்ளைகளுடன் அவளால் விளையாடவும்முடியாது.
13 வயதிற்குப் பின்னரே இவளது மண்டையோடு பலமாகும் என்பதால் அதன்பின்னரே இவளுக்குச் சத்திர சிகிச்சை செய்யமுடியுமென்றனர் லண்டனின் Great Ormond Street வைத்தியசாலையின் வைத்தியர்கள்.
இவளது மண்டையோடு பிறந்ததைவிடவும் சற்று நிரவியுள்ளதாகக் கூறினாலும் அதன்பின்னர் அது வளர்வதற்கு இடமில்லையென்றும் நிரந்தரமாகவே இந்த இடைவெளியுடனேயே காணப்படுமென்றும் தெரிவித்தனர்.