கடவுள் ஆசிர்வதத்தால் அடுத்த குழந்தைக்கு தயாராவேன் என்று முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் கூறியுள்ளார். |
கேன்ஸ் திரைப்பட விழாவில் 10 ஆண்டுகளாக கலந்து கொண்டு வருகின்ற ஐஸ்வர்யா ராய், இவ்வருடம் பார்த்தவர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள். காரணம், கடந்த ஆண்டுகளை விட இவ்வருடம் ஐஸ்வர்யாவின் உடலில் ஏற்பட்ட கூடுதல் அளவே ஆகும். திருமணத்திற்கு பின்பு குழந்தை பெற்றெடுத்த ஐஸ்வர்யாவின் உடல் எடை அதிகரித்துள்ளது. இதனால் எழுந்த விமர்சனத்திற்கு பதிலளித்து ஐஸ்வர்யா பேசியதாவது, நான் குழந்தையின் அம்மாவாக எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்கின்றேன். என் உடம்பை குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் பட்டினியாக இருக்க விரும்ப வில்லை. என் குழந்தையின் நலனை கவனித்து நன்றாக சாப்பிடுகின்றேன். நான் குண்டாக இருப்பதாக அக்கறையுடன் கவலைப்படும் ரசிகர்களுக்கு நன்றி கூறிய ஐஸ், கடவுள் ஆசிர்வாதத்தால் அடுத்த குழந்தைக்கு தயாராவேன் என்றும் கூறியுள்ளார். |