Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

08 ஜூன் 2012

வெப் ஹோஸ்டிங் தெரிவு செய்வது எப்படி?


வெப் ஹோஸ்டிங்க் பற்றி எழுதி ரொம்ப நாள்  ஆகிவிட்டது. அநேகமாக கடந்த பதிவுகளை படித்தவர்களுக்கு வெப் ஹோஸ்டிங்க் பற்றி தெரிந்து இருக்கும். வெப் ஹோஸ்டிங்க் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களை ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். இப்போது உங்கள் வெப் ஹோஸ்டிங்க் எப்படி தெரிவு செய்வது என்று சொல்கிறேன். 


முதலில் நீங்கள் எதற்கு வெப் ஹோஸ்டிங்க் வாங்குகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். உங்கள் நிறுவனத்துக்கோ அல்லது இயக்கம், அமைப்பு போன்றவற்றுக்கு என்றால் அதற்கு ஏற்றபடி தெரிவு செய்ய வேண்டும். எதுவாய் இருப்பினும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது பேண்ட்வித், டிஸ்க் ஸ்பேஸ். 

ஏன் என்றால் இயக்கம் அல்லது அமைப்பு போன்றவற்றுக்கு என்றால் அது உங்களைப் பற்றி சொல்வதற்கு மட்டுமே இருப்பினும் குறைந்த அளவு பேண்ட்வித் உள்ளது போல போதும். இதே போல டிஸ்க் ஸ்பேஸ், நீங்கள் என்ன அப்லோட் செய்கிறீர்கள் என்பதை பொறுத்தது. எனவே நல்ல திட்டமிடல் அவசியம். 


நீங்கள்  ஹோஸ்டிங்க் வாங்கும் தளத்தில் வேர்ட்ப்ரஸ் பிளக்-இன் வசதி உள்ளதா என்று பாருங்கள். ஏன் என்றால் பிளாக்கர்க்கு அடுத்து எல்லோரும் தெரிவு செய்வது வேர்ட்ப்ரஸ்  . (இது வருமானத்திற்காக ஹோஸ்டிங்க் செய்ய விரும்புபவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது).

அடுத்து தள வடிவமைப்பு வசதிகள்: நாம் வடிவைப்பு செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும். (Template Availability ) இல்லை என்றால் இதற்கு தனியாக நீங்கள் செலவு செய்ய வேண்டி வரும். (வெப் மொழிகள் தெரியாதவர்களுக்கு மட்டும்)

உதாரணமாக அன்லிமிடெட் பேண்ட்வித்,டிஸ்க் ஸ்பேஸ், இமெயில் அக்கௌண்ட்ஸ் என்று வாங்கினால் மாதம் 500 ரூபாய்(உத்தேச மதிப்பு) (10$) என்று கொண்டால் வருடத்திற்கு 6000 ரூபாய் (120$) . இவ்வளவு செலவு என்பது வருமானம் உள்ள தளத்துக்கு தான் சரிப்படும்.1000 ரூபாயில் கூட முடிக்கலாம் ஒரு வருடத்துக்கு.

ஒரு டிரஸ்ட் ஒன்றுக்கு தளம் என்றால் முதலில் கூறிய அதிக செலவு தேவைப்படாது. எனவே இரண்டாவதை தெரிவு செய்யலாம்.

மற்றபடி எந்த தளத்தில் டொமைன் வாங்குவது என்பதை நான் பரிந்துரைக்க விரும்பவில்லை. விலை, உங்கள் தேவை என்பதை பொறுத்து இது மாறும். எனவே முதலில் உங்கள் திட்டமிடல் தான் அவசியம்.

Host U Can என்ற தளத்தில் நீங்கள் எந்த மாதிரியான ஹோஸ்டிங்க் செய்ய வேண்டும் என்பதை கொடுத்தால் உங்களுக்கு ஏற்ற வகையில் ஹோஸ்டிங்க் தகவல்களை கொடுக்கிறது.

ஆரம்பத்தில் சில தகவல்களை கொடுத்த பின் Side Bar இல் உங்களுக்கு தேவையான படி Filter செய்து கொள்ளலாம். 

இதில் ஒரு குறைபாடு இது அமெரிக்க கணக்கில் பணம் கூறுவது. ஆனாலும் பயனுள்ளது.


Read more: http://www.karpom.com/2011/12/web-hosting-4.html#ixzz1xCBMYVSZ
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com